50ம் ஆண்டுகளில் ஜப்பானிலிருந்து சீனாவுக்கு திரும்பிய திரு லோ லு வூ சீன வானொலி நிலையத்தின் ஜப்பானிய மொழி ஒலிபரப்பில் ஈடுபட்டார். அப்போதைய நிலைமை அவருடைய மனதில் மிக தெளிவாக பதிந்து விட்டது. சுமார் 70 வயதாகிய அவர் அப்போதைய நிலைமை பற்றி நினைவு கூர்ந்து கூறியதாவது.
ஹரா கியோஷி தமது குரலின் மூலம் ஜப்பானியர் தொடுத்த போரின் உண்மையை விளக்கி கூறினார். எது நீதி என்ற உண்மையை வானொலி மூலம் பலர் அறிந்து கொண்டனர். நமது வானொலி நிலையத்தில் பணிபுரிந்த ஜப்பானிய நிபுணர்கள் படையினராக இருந்தவர். அவர்களில் சிலர் போரில் சரணடைந்தவர் என்றார்.
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் வெற்றி பெற்ற பின் 1947ம் ஆண்டின் துவக்கத்தில் யேன் ஆன் சின்குவா வானொலி நிலையம் பெய்சிங்கிலிருந்து சற்று தூரத்தில் உள்ள ஹோபேய் மாநிலத்தின் SHE மாவட்டத்துக்கு நகர்ந்தது. அந்த ஆண்டின் செப்டெம்பர் திங்களில் ஆங்கில மொழி ஒலிபரப்பு துவங்கியது. தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகளும் ஒலிபுரப்பு தெளிவாக கேட்க முடியும். ஒலிபரப்பின் மூலம் வெளிநாட்டு மக்கள் சீனாவில் நிகழ்ந்த உண்மைகளை அறிந்து கொண்டனர்.
1949ம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின் யேன் ஆன் சின்குவா வானொலி நிலையம் தலைநகர் பெய்சிங்கிக்கு நகர்ந்தது. அப்போது முதல் பீகிங் சின்குவா வானொலி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு சின்குவா வானொலி ஒலிப்பரப்பியது.
இப்போது கேட்ட ஒலி 1949ம் ஆண்டு ஒக்டோபர் திங்கள் 1ம் நாள் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட போது நேரடியாக ஒலிபரப்பிய ஒலிபதிவாகும்.
நவ சீனா நிறுவப்பட்ட பின்னர் சீன வானொலி நிலையம் உற்சாகத்துடன் பல்வேறு நாடுகளுக்கு சீன அரசின் கொள்கை, கோட்பாடுகள் ஆகியவற்றையும் அரசியல், பொருளாதாரம், சமூகத்தின் பல்வேறு துறைகள் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும் சீனாவுக்கும் பல்வேறு நாடுகளுக்குமிடையிலான பரிமாற்றம் ஒத்துழைப்பு ஆகியவற்றையும் அறிமுகபடுத்தியுள்ளது. சீன வானொலி நிலையம் சீன மக்களுக்கும் பல்வேறு நாடுகளின் மக்களுக்குமிடையிலான புரிந்துணர்வையும் நட்பையும் அதிகரிக்கும் பாலமாகியுள்ளது.
1950ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் ரேடியோ பீகிங் என்ற பெயரில் சீன வானொலி நிலையம் ஒலிபரப்ப துவங்கியது. "கிழக்கிலிருந்து உதிக்கும் சூரியன்"என்ற பாடலின் இசை சீன வானொலி நிலையத்தின் துவக்க இசையாகியுள்ளது. தென்கிழக்காசிய நாடுகளின் மக்களுக்கு நவ சீனாவின் நிலைமையையும். சீனா கடைபிடிக்கும் சுயேச்சையான சமாதான வெளிநாட்டு கொள்கையையும் அறிமுகப்படுத்தும் வகையில் வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா, மியன்மர் மொழிப் பிரிவுகள் நிறுவப்பட்டன. இதையடுத்து தமிழ் மொழி, பாரசீக மொழி, அரபு மொழி, ஸ்வாஸ்ஹிலி மொழி, ஸ்பெயின் மொழி போன்ற மொழிப் பிரிவுகள் நிறுவப்பட்டன. வானொலி மூலம் அரேபிய நாடுகளுக்கும், ஆப்பிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கும் சோஷலிச சீனா அறிமுகப்படுத்தப்பட்டது. சீன மக்களுக்கும் வளரும் நாடுகளின் மக்களுக்குமிடையிலான நட்பு அதிகரித்தது. அதேவேளையில் ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆங்கிலம் பேசும் வட்டாரங்களுக்கான ஆங்கில மொழி ஒலிபரப்பு நேரம் நாளுக்கு நாள் அதிகரித்தது.
1965ம் ஆண்டில் சீன வானொலி 27 அன்னிய மொழிகளிலும் சீன மொழி உள்ளிட்ட 4 உள்ளூர் மொழிகளிலும் ஒலிபரப்பியது. நாளுக்கு மொத்தம் 98 மணி நேரம் உலகத்திற்கு ஒலிபரப்பியது. சீன வானொலி நிலையத்தில் பயன்படுத்தப்படுகின்ற மொழி வகைகளும், ஒலிபரப்பு நேரமும் உலகின் முன்வரிசையில் நுழைந்துள்ளன. வலிமைமிக்க திறமை கொண்ட ஊடனுப்பி நிலையங்களும் அடுத்தடுத்து கட்டியமைக்கப்பட்டுள்ள. 70ம் ஆண்டுகளின் நடுக் காலத்தில் 38 அன்னிய மொழிகளிலும் 5 உள்ளூர் மொழிகளிலும் சீன வானொலி உலகத்திற்கு ஒலிபரப்பியது.
நேயர்களே இன்றைய கட்டுரை முடிவடைவதற்கு முன் ஏற்கனவே குறிப்பிட்ட இரண்டு வினாக்களை மீண்டும் குறிப்பிடுகின்றோம். கவனமாக பதிவு செய்து கொள்ளுங்கள். முதலாவது வினா சீன வானொலியின் முதலாவது அறிவிப்பாளர் யார்?இரண்டாவது வினா 1950ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் சீன வானொலியின் பெயர் என்ன?நேயர்களே நானும் சீன வானொலி நிலையமும் என்னும் பொது அறிவு போடிக்கான முதலாவது கட்டுரையை கேட்டீர்கள். நாளை இந்த நேரத்தில் பொது அறிவு போட்டிக்கான இரண்டாவசு கட்டுரையை ஒலிபரப்புவோம். 1 2
|