• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-30 12:08:46    
உற்சாகமாக உழைப்பது

cri

ராஜா....வணக்கம் நேயர்களே. இப்போது நலவாழ்வுப் பாதுகாப்பு நேரம். இன்றைய நிகழ்ச்சியில் உற்சாகமாக உழைப்பது பற்றி உங்களுடன் உரையாடுவது கலையரசி ராஜாராம்.

கலை....ராஜா நாம் எல்லோருமே அலுவலகத்தில் வேலை செய்கிறோம். சில சமயங்களில் நாம் ஒழுங்காக வேலை செய்கிறோமா என்று நம்முடைய மேலதிகாரி வந்து பார்க்கிறார். சில அலுவலகங்களில் பணியாளர்கள் நமது பார்வையின் கீழ் தான் வேலை செய்ய வேண்டும் என்று நிர்வாகிகள் நினைக்கிறார்கள். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ராஜா....எந்த ஒரு நிர்வாகியுமே தனது பணியாளர் நிறைய வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பது இயல்புதான். அதனால் தான் அவர்கள் பணியாளர் சரியான நேரத்தில் வேலைக்கு வந்துவிட்டாரா என்று கண்காணிக்கின்றனர். வேலை நேரத்தில் அரட்டை அடிக்காமல் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இப்படி மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வது எதிர்விளைவை உண்டாக்கும் என்று மனோதத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

கலை......இந்த எதிர்விளைவு ஏற்படாமல் எப்படி தடுப்பது?

ராஜா......ரொம்பச் சுலபம், பணியாளர்களுக்கு களைப்பையும் மனச் சோர்வையும் உண்டாக்கும் சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும். சில இடங்களில் பணியாளர்கள் நீண்ட நேரம் பயணம் செய்து பணியிடத்திற்கு போக வேண்டியுள்ளது. பயணக் களைப்பு பாதி உழைப்பைத் தின்றுவிடுகின்றது. இதைப் போக்க நேரத்திற்கு அலுவலகம் வர வேண்டும் என்று சொல்லாமல் இந்த வேலையை குறிப்பிட்ட நாளில் நீ செய்து முடிக்க வேண்டும். வீட்டில் இருந்து செய்தாலும் சரிதான் என்று அனுமதிக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு வேலை நாட்களாவது பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கலாம் என்று அடிப்படை உடல் நலப் பராமரிப்பு நிபுணர் கிரஹாம் துகாஸ் கூறுகிறார்.

1  2