• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-30 12:08:46    
உற்சாகமாக உழைப்பது

cri

கலை......வேலைக்கு நேரமாகிவிட்டது என்று வேகவேகமாக வருகின்றோம். அலுவலகத்தில் வந்து உட்கார்ந்தவுடன் உடனே வேலை செய்ய முடிவதில்லை. இது எப்படி?

ராஜா.....இதை மன அழுத்தம் என்பார்கள். போக்குவரத்து நெரிசலில் சிக்கி திண்டாடி திணறி அலுவலகம் வரும்போது உங்களுடைய மன அழுத்த சுரப்பிகள் அதிகம் ஹார்மோன்களை சுரக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் வந்து உட்கார்ந்ததுமே வேலை செய்யத் தொடங்கினால் உங்கள் நிர்வாகி நினைக்கலாம். பரவாயில்லையே. சுறுசுறுப்பான ஆள்தான் என்று நினைக்கலாம். ஆனால் உண்மையில் உங்களால் ஒழுங்காகவும் முழுமையாகவும் வேலை செய்ய முடிவதில்லை. ஏனென்றால் சுரந்த ஹார்மோன்கள் சிறிது நேரத்திற்கு அப்படியே இருக்கின்றன. இதைத் தான் படபடப்பு என்கிறார்கள். இந்த படபடப்பு அடங்குவதற்கு சிறிது நேரம் ஆகும். ஆகவே ஒரு நிமிடமாவது எந்த வேலையும் செய்யாமல் மனதை நிதானப்படுத்திவிட்டு அப்புறம் வேலை செய்யத் தொடங்குங்கள் என்று மன அழுத்த நிபுணர் டேவிட் லெவிஸ் கூறுகிறார்.

கலை.....நீங்கள் எங்காவது ஒரிடத்திற்கு போகும் போது சரியாக 9 மணி 45 நிமிடத்திற்கு வந்து விடுவேன் என்று சொல்கிறீர்கள். ஆனால் போக முடிவதில்லை. அப்போது மனது பரபரப்பாகிறது. இது எப்படி?

ராஜா.....நேரத்தை அதாவது உங்கள் கடிகாரத்தை நிறுத்திவிடுங்கள். ஏனென்றால் நமது வேகத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய நூற்றுக்கணக்கான காரணிகள் உள்ளன. ஆகவே சரியாக 9 மணி 45 நிமிடத்திற்கு வருவேன் என்று காலக் கெடு குறித்துவிட்டு மனதில் பரபரப்பை வரவழைக்காதீர்கள்.

கலை.....சில சமயங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக சீக்கிரமே அலுவலகத்திற்கு வந்து விடுகிறோம். அல்லது அலுவலகத்தில் இருந்து தாமதமாக வீட்டுக்கு புறம்படுகின்றோம். ஆனால் கூடுதல் நேரம் அலுவலகத்தில் இருந்தாலும் சரியாக வேலை செய்ய முடிய வில்லையே. எதனால்?

ராஜா.......நீண்ட நேரம் அலுவலகத்தில் உட்கார்வது உங்களுக்கு களைப்பை உண்டாக்குகிறது. களைத்த மனது ஒழுங்காக உழைக்காது என்கிறார் மனவியல் நிபுணர் டேவிட் லுகாஸ்.

கலை......என்ன நேயர்களே. உங்கள் மனதை களைப்படைச் செய்யாதீர்கள். நிம்மதியான மனதுடன் வேலை செய்தால் நிறைய வேலை செய்யலாம் என்ற அறிவுரையோடு நலவாழ்வும் பாதுகாப்பு நிகழ்ச்சியை நிறைவு செய்கிறோம்.


1  2