
இயற்கையான அழகுபடும் தீவு
இத்தாலியின் தென் பகுதியில் பால்காரோ எனும் தீவு உள்ளது. நெடுஞ்காலத்துக்கு முன்பே, இத்தீவில் எரிமலை வெடித்தெழுந்து, எரிமலை குழம்பு மலையடிவாரத்தில் பாய்ந்தோடிய பின், சேறுசகதிகளாக இவை உருவாயின. சுமார் பத்து குளங்களாக சேமிக்கப்பட்டன. இந்த எரிமலைக்குழம்பு படிவங்கள் தோலை வெள்ளையாக்கவும் மென்மையாக்கவும் கூடியவை. தோல் வழுவழுப்பாகவும் தூய வெண் நிறமாகவும் இதன் மூலம் மாறும். தவிரவும், பெண்களின் இடுப்பு வலிக்கும் சிகிச்சை செய்ய முடியும். கொழுப்பைக் குறைப்பதற்கும் துணை புரியும். இதனால், அது இயற்கை அழகு தீவு என்றும் அழைக்கப்படுகிறது.

பறவை தீவு
மேற்கு இந்து மாக்கடலைச் சேர்ந்த செசல்ஸ் தீவுகளில் 40 ஹெக்டேர் நிலப்பரப்புடைய சிறிய தீவு ஒன்று உள்ளது. அங்கு மக்கள் குறைவு. அனால் PETRELகளின் உறைவிடமாக இத்தீவு விளங்குகிறது. அதிகாலையில் அவை அருகிலுள்ள கடல் பரப்பில் மீன்களையும் இறால்களையும் பிடித்து தின்னுகின்றன. அந்த வேளையில் அவை கூட்டம் கூட்டமாக தீவுக்கு திரும்பும்.
1 2
|