• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-29 19:36:00    
பல்வேறு தீவுகள்

cri

ஆமை தீவு

காராபாகோஸ் என்னும் தீவு ஒன்று, தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்கு பகுதியிலுள்ள பசிபிக் மாக்கடலில் அமைந்துள்ளது. காராபாகோஸ் என்பதற்கு, ஸ்பேனிஷ் மொழியில் ஆமை தீவு என்று பொருள். முற்காலத்தில் இத்தீவில் கடல் ஆமைகளும் தரையில் வாழும் ஆமைகளும் வாழ்ந்து வந்தன. மிகப் பெரிய ஆமையின் எடை, 400—500 கிலோகிராமாகும். இவை, இரண்டு பேரை முதுகில் சுமந்து செல்ல கூடியவை. காலபோக்கில் மக்கள் அவற்றை வேட்டையாடி கொன்றதால் தற்போது அங்கு மிக சில ஆமைகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

மணலால் உருவாக்கப்பட்ட தீவு

உலகிலுள்ள இரண்டு லட்சம் கடற் தீவுகளில், மணலால் குவிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கடற் தீவானது, பசிபிக் மாக்கடலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹவாய் வீவாகும். மாரில்லான் பல்கலைக்கழகத்தின் டாக்டர் வெலியன்ஸ் சொரா உள்ளிட்ட அறிவியலாளர்கள் இத்தீவிலுள்ள நிலம் மற்றும் வானிலை ஆராய்ச்சி செய்த பின், இந்த முடிவுக்கு வந்துள்ளார்கள். சீனாவில் அடிக்கடி மணல் காற்று வீசும் போது, பெரும்பாலான தும்பு தூசிகள் பெரிய பாலைவனத்தைப் பறந்து சென்ற போது, நூற்றுக்கணக்கான மைல் நீளமுடைய கருமேகம் ஆகாயத்தில் உருவாயிற்று. இந்த பெரும் கருமேகம் வாடை காற்றால் வட பசிபிக் மாகடலைக் கடந்து அமெரிக்காவின் அலாஸ்கா வளை குடாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அது தெற்கு திசையை நோக்கி இறுதியில் ஹவாய்க்கு அருகில் வீழந்தது. காலம் செல்ல செல்ல, இறுதியில் அது இன்றைய ஹவாய் தீவாக உருவாக்கப்பட்டுள்ளது என்று அறிவியலாளர்கள் விளக்கிக்கூறினார்கள்.


1  2