• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-06 16:45:42    
பறவை காய்ச்சல் தடுப்பு முயற்சி

cri

கலை......ஆமாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகின் பல்வேறு இடங்கள் பறவை காய்ச்சலால் தாக்கப்பட்டது. தென்கிழக்காசியாவின் சில இடங்களில் மனிதர் பறவை காய்ச்சல் கிருமி தொற்றியது. அப்போது சீனாவிலும் சில இடங்களில் பறவை காய்ச்சல் கிருமி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மனிதருக்கு அது தொற்றியிருக்க வில்லை.

ராஜா.....ஆனால் அந்த நிலைமையை சீன அரசு எதிர்நோக்கியது. இது தொடர்பாக எந்த அளவில் என்ன முயற்சி செய்துள்ளது என்று சொல்லலாமா?

கலை......நடைமுறை நிலைமையை பார்க்கும் போது மனிதரை இந்த நோய் பாதிக்காமல் தவிர்க்கும் வகையில் உடனடியாக தடுப்பூசி மருந்து மருந்தை ஆராய்ந்து தயாரிக்கும் பணியை சீன அரசும் தொடர்புடைய அமைப்புகளும் துவங்கின.

ராஜா.....இந்த முயற்சியில் என்னென்ன நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன?

கலை..... 2004ம் ஆண்டின் துவக்கத்தில் சீனாவில் கோசின் என்னும் நிறுவனம் மனிதருக்கென பறவை காய்ச்சல் தடுப்பூசி மருந்து ஆராயந்து தயாரிக்கும் பணியில் முதலில் ஈடுபட்டது. இந்த நிறுவனம் சீனாவில் மிக புகழ் பெற்ற உயரிய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனமாகும்.

ராஜா..... ஆராய்ச்சியிலும் கண்டுபிடிப்பிலும் இதன் திறமை எப்படி? தடுப்பூசி மருந்து ஆராந்து தயாரிப்பதில் அதற்கு அனுபவம் உண்டா?எந்த வகை தடுப்பூசி மருந்தை தயாரிக்கிறது?இது பற்றி நீங்கள் விவரிக்கலாமா?

கலை......கண்டிப்பாக. கோசின் என்னும் நிறுவனத்திற்கு தடுப்பூசி மருந்து ஆராய்ந்து தயாரிப்பதில் நல்ல அனுபவம் உண்டு. ஹெப்படிட்டிஸ் ஏ என்னும் மஞ்கள் காமலை தடுப்பூசி மருந்துகளை வெற்றிகரமாக தயாரித்துள்ளது. அப்போது சார்ஸ் நோய் தடுப்பூசி மருந்து ஆராய்ந்து தயாரிக்கும் பணியில் இந்த நிறுவனம் ஈடுப்பட்டிருந்தது.

ராஜா.....இந்த நிறுவனம் மனிதருக்காக ஆராய்ந்து தயாரிக்கும் தடுப்பூசி மருந்து எந்த வகையானது?

கலை.....பறவை காய்ச்சல் தடுப்புக்காக நோய் கிருமியை அழிக்கும் திறனுள்ள ஊசி மருந்தை தயாரிப்பதில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

ராஜா....விவரமாக எடுத்து காட்டலாமா?

கலை....சொல்கின்றேன். உலக சுகாதார அமைப்பின் உதவியுடன் தடுப்பூசி மருந்துக்கு தேவைபடும் வைரஸ்களை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. மிக சிக்கலான வைரஸ் வளர்ப்பு மற்றும் பெருக்கத்தை துவக்கியது. இந்த ஆராய்ச்சி பறவை காய்ச்சல் தடுப்பு மருந்தை உருவாக்குவதில் மிக கடுமையான பகுதியாகும்.

ராஜா.....ஆராய்ச்சியில் என்த வகை முயற்சி செய்ய வேண்டும்?

கலை......ஆய்வாளர்கள் வைரஸ் கிருமியை முட்டைக்குளே ஊசிமூலம் செலுத்த வேண்டுடம். கிருமி செலுத்தப்பட்ட இந்த முட்டை 3 நாட்கள் வளர்க்கப்படும் பின்னர் நோய் கிருமி இந்த முட்டையிலிருந்து பிரிக்கப்பட்டு தடுப்பூசி மருந்தின் அடிப்படை ஊட்டமாக வளர்க்கப்பட வேண்டும். ஆகவே முட்டைகள் காரில் நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கூடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. பக்குவமடையும் நோய் கிருமியை பெறும் வகையில் ஆய்வாளர்கள் பகலிலும் இரவிலும் பல்வகை உயிரின சூழலில் முட்டைகளை வளர்க்க முயற்சித்துள்ளனர்.


1  2