சீன விவசாயிகள் வேளாண் வரியை கட்ட வேண்டாம். கோடிக்கணக்கான விவசாயிகள் 2000 ஆண்டுகளாக கட்டி வந்த வேண்ளாண் வரி நீக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2006ஆம் ஆண்டில் வேளாண் வரி நீக்கப்படும் என்றும், உள்ளூர் அரசுகளின் நஷ்டத்துக்கு மத்திய அரசின் நிதித் துறை ஈடு கட்டும் என்றும் சீன அரசு 2005ஆம் ஆண்டின் இறுதியில் அறிவித்தது.
நீண்டகாலமாக, வரி என்பது, சீன விவசாயிகளின் சுமைகளில் ஒன்றாகும். நகரவாசிகள் வருமான வரியையும் மதிப்பு கூட்டுவரியையும் கட்டும் போது, கிராமங்களிலுள்ள விவசாயிகள் பயிர்களின் அறுவடைக்காக வரி கட்ட வேண்டியுள்ளது. அத்துடன் அறுவடை எப்படி என்று பார்க்காமல், குறிப்பிட்ட விகிதப்படி வரியைக் கட்டியாக வேண்டும். இதனால், நகரவாசிகளுக்கும் கிராம மக்களுக்குமிடையிலான வருமான இடைவெளி அதிகரிப்பதுடன் ஏழை-பணக்கார இடைவெளியும் அதிகரித்து வருகிறது.
1 2
|