வரிச் சீர்திருத்தத்துக்கு முன்பு, ஒவ்வொரு விவசாயிக் குடும்பமும் ஆண்டு தோறும் 300 ரென்மின்பி யுவானை வரிக் கட்ட வேண்டியிருந்தது. இது பார்த்தால் அவ்வளவு பெரிய தொகை இல்லை என்ற போதிலும், விவசாயிகளின் ஆண்டு வருமானத்தின் பத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது. வருமானம் இருக்கிறதா இல்லையா என்பதையும், முதியவரா குழந்தையா என்பதையும் பார்க்காமல் அனைவரும் ஒரே தொகை வரியை கட்ட வேண்டும். தற்போது சீனாவில் விவசாயிகள் கட்டும் வரி தொகை, அரசின் நிதி வருமானத்தின் ஒரு விழுக்காடு மட்டும் வகிக்கிறது. ஆனால், 1950ஆம் ஆண்டு சீனாவில் நில சீர்திருத்தம் நடைபெற்ற போது, இந்த விகிதம் 40 விழுக்காடாக இருந்தது.
சீனாவில் நகரவாசிகளின் வருமானம் கிராம விவசாயிகளின் வருமானத்தை விட 2.3 மடங்கு அதிகரித்துள்ளது. மருத்துவ பாதுகாப்பு உள்ளிட்ட ஏனைய உதவி தொகையைச் சேர்த்தால், இந்த இடைவெளி மேலும் பெரிதாக இருக்கும் என்று சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகங்கள் அறிவித்தன.
வருமானம் குறைவாக இருக்கும் மக்களின் மீது சீன அரசின் அக்கறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகள் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் விவசாயிகளின் சுமையை குறைக்கும் பணி மேலும் தீவிரமாக்கப்பட வேண்டும். ஏனென்றால், அதிகாரப்பூர்வ வேளாண் வரி மட்டுமே உள்ளூர் அரசின் வருமானமாக உள்ளது. இதர வரி தொகைகளையும் குடும்ப நல திட்டக் கொள்கையை மீறியதால் கட்ட வேண்டிய அபராத பணத்தையும் உள்ளூர் அரசுகள் வசூலிக்கின்றன. வேளாண் வரியை நீக்கியதால் உள்ளூர் அரசுகளின் வருமானம் மேலும் குறைந்து விடும். இதனால் அவற்றுக்கு சில பாதிப்புகள் ஏற்படும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 1 2
|