• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-15 08:29:42    
கன்பிஃசோஸ் கல்வி விருது

cri

ராஜா.....முதலில் கன்பிஃசோஸ் கல்வி விருது என்றால் என்ன என்பது பற்றி விவரிக்கின்றோம்.

கலை..... கன்பிஃசோஸ் கல்வி விருது என்பது சீன அரசு வழங்கும் பரிசு அல்ல. இதன் முழுமையான பெயர் "சர்வதேச கன்பிஃசோஸ் கல்வி விருது"என்பதாகும். யுனேஸ்கோ வழங்கும் மிகவும் உயர் விருது இது.

ராஜா.....சீனரின் பெயரில் உலகளவில் ஒரு விருது வழங்கப்படுவது இதுதான் முதல் முறையா?

கலை.....ஆமாம். சீனரின் பெயரில் ஐ.நா விருது வழங்குவது இதுதான் முதல் முறை. கல்வி குறிப்பாக கிராமப்புறத்தில் கல்வி உள்ளிட்ட துறைகளில் மாபெரும் சாதனை கண்டுள்ள அரசுத் துறை நிறுவனங்கள் அரசு சாரா அமைப்புக்கள் தனிநபர் ஆகியோரை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகின்றது.

 

ராஜா.....இந்த விருது எந்த நாளில் எந்த கூட்டத்தில் உறுதிபடுத்தப்பட்டது?

கலை......இந்த விருது நிறுவுவது பற்றி கடந்த செப்டெம்பர் திங்கள் 29ம் நாள் யுனேஸ்கோவின் 172வது செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 2006ம் ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது.

1  2