ராஜா.....இந்த விருதிவ் எவ்வளவு பணம் தரப்படுகிறது?எந்த நாட்டு அரசு இலிருந்து செலவை ஏற்றுக் கொள்ளப்படுகின்றது?
கலை.....சீனாவின் சாந்துங் மாநில அரசும் இந்த மாநிலத்தின் ஜீனின் நகர அரசும் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கும். அதைக் கொண்டு சீன அரசின் சார்பில் யுனேஸ்கோவில் கன்பிஃசோஸ் கல்வி விருது நிறுவப்படும்.
ராஜா.....விருது பெறுவதற்குரியவர்களை பரிந்துரைப்படு யார்?
கலை......இந்த விருது பெறுவதற்கான வேட்பாளர்களை யுனேஸ்கோவின் உறுப்பு நாடுகள் பரிந்துரைக்கலாம். அல்லது, யுனேஸ்கோவுடன் தொடர்பு கொண்ட அரசு சாரா அமைப்புக்கள் பரிந்துரைக்கலாம்.
ராஜா.....அப்படியானால் பரிந்துரைப்பதற்கு வரம்பு கிடையாதா?
கலை.....அப்படி அல்ல. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு அரசு சாரா அமைப்பும் ஆண்டுக்கு இரண்டு வேட்பாளர்களை பரிந்துரை செய்யலாம். ஒவ்வொரு ஏப்ரல் திங்கள் 30ம் நாளுக்கு முன் வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.
ராஜா......அந்த நிலையில் பட்டியலைப் பரிசீலித்து தெரிவு செய்வதற்கு குழு இருக்குமா?
கலை.....5 உறுப்பினர்கள் அடங்கிய ஆய்வுக் குழு ஒன்று இந்த வேட்பாளர் பட்டியல் பற்றி விவாதித்து முடிவு செய்ய வேண்டும்.
ராஜா.....முடிவு எப்போது வெளியிடப்படும்?
கலை.....விருது பற்றிய முடிவை யுனேஸ்கோவின் தலைமை இயக்குனர் சர்வதேச எழுத்தறிவு நாளான செப்டெம்பர் 8ம் நாளன்று அறிவிக்கும்.
ராஜா....விருது பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ், விருது ஆகியவை வழங்குவது தவிர, ஆய்வுப் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்குமா?
கலை.....கண்டிப்பாக, விருது பெறுவோருக்கு பரிசுப் பணம், சான்றிதழ், விருது ஆகியவற்றோடு அவர்கள் சீனாவின் சாந்துங் மாநிலத்தின் ஜீநின் நகருக்கு சென்று ஆய்வு பயணம் செய்யலாம்.
ராஜா.....இலவச ஆய்வு பயணமா?
கலை....கண்டிப்பாக. இதில் சந்தேகம் எதுவும் இல்லை.
1 2
|