• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-14 17:31:00    
மேலும் அழகாக மாறியுள்ள சீன நகரங்கள்

cri

நேயர்களே, பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியுடன் குடியிருப்பு சூழ்நிலை மற்றும் நகர சுகாதார வசதிகளுக்கான சீன மக்களின் தேவையும் தொடர்ந்து பெருகிவருகின்றது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் விரைவில் வர உள்ளதால், நகரங்களில் சுகாதார சூழ்நிலை மேலும் மேம்பட்டுள்ளது. பெய்சிங்கில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை வரவேற்கும் வகையில், நாகரிகத்தில் கவனம் செலுத்தி, புதிய பழக்கவழக்கங்களை உருவாக்குவது என்ற நடவடிக்கை ஏற்கனவே துவங்கியுள்ளது. ஷாங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையின் விளைவாக, நகர சூழ்நிலையும் சுகாதார வசதிகளும் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. அண்மையில் சீன நகரங்களின் சுகாதாரத் துறையில் ஏற்பட்ட மாற்றம் பற்றி வெளிநாடுகளிலுள்ள சீன செய்தியாளர்கள், தாம் தங்கியிருக்கும் நாட்டில், சீனாவுக்கு வந்து திரும்பியுள்ள சிலரை பேட்டிகண்டனர்.

முதலில், இந்தியாவிலுள்ள சீன செய்தியாளர் ரென் யான் எங்களுக்கு அனுப்பிய செய்தியைக் கேளுங்கள்.

கடந்த ஆண்டு இந்தியாவின் நேரு பல்கலைக்கழகத்தின் சீன மொழித் துறை மாணவர் சின் ரென் ஜியே பெய்சிங் வந்து "சீன மொழிப் பாலம்"என்ற தலைப்பிலான நான்காவது சீன மொழிப் போட்டியில் கலந்து கொண்டார். சீனா மிகவும் சுத்தமானது. இது என் மனதில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது. பெய்சிங், சீஆன், ஹாங் சோ, ஷாங்கை, ஷாவ் சிங் முதலிய நகரங்களுக்கும் சில கிராமங்களுக்கும் சென்று பார்த்தேன். எல்லா இடங்களிலும் குப்பைகள் அகற்றப்பட்டு கழிப்பறைகள் உள்ளிட்ட சுகாதார வசதிகள் சுத்தமாக காணப்படுகின்றன என்று இந்த மாணவர் கூறினார்.

இந்தியாவில், சீனா பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. இந்தியர்கள் சீனாவையும் இந்தியாவையும் ஒப்பிட்டு பார்க்க விரும்புகின்றனர். சுற்றுச்சூழல் துறையில் இரு நாடுகளுக்கிடையில் நிலவும் இடைவெளி அடிக்கடி குறிப்பிடப்படுகின்றது. அடிப்படை வசதிகள் உருவாக்குவதில் சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் பெரும் இடைவெளி நிலவுகின்றது. சுற்றுச்சூழல் துறையில் நிலவும் இடைவெளி குறிப்பிடத்தக்கது என்று இந்துஸ்தான் டைம்ஸ் என்னும் செய்தியேடு வெளியிட்ட ஒரு கட்டுரையில் கூறுகின்றது.

1  2