• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-14 17:31:00    
மேலும் அழகாக மாறியுள்ள சீன நகரங்கள்

cri

20 ஆண்டுகளுக்கு முன், இரு நாடுகளின் சுற்றுச்சூழல் சுகாதார நிலை கிட்டத்தட்ட ஒரே நிலையில் இருந்தது. ஆனால் தற்போது, இந்தியாவை சீனாவுடன் ஒப்பிட முடியாது. சீனாவின் விமான நிலையங்கள் மிகவும் கம்பீரமானவை, விசாலமானவை. நகரங்களை பசுமை மயமாக்குவதில் இந்தியாவைவிட சீனா சற்று பின்தங்கியுள்ள போதிலும், கடந்த காலத்தில் இருந்ததைவிட, இப்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், சீனா மேலும் சுத்தமாக மாறியுள்ளது. இதனால்தான், 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை பெய்சிங்கில் நடத்துவதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அங்கீகாரம் தந்துள்ளது என்றும் கட்டுரை கூறுகின்றது.

அடுத்து, பெல்ஜியத்திலுள்ள எமது செய்தியாளர் அனுப்பிய செய்தியறிக்கையை கேளுங்கள்.

கிரிஸ்டோபர். ராக்லாங்க் என்பவர், ஒரு சீன பெல்ஜிய வர்த்தக நிறுவனத்தின் துணை மேலாளர். 1988ஆம் ஆண்டு அவர் முதல் முறையாக சீனாவுக்கு வந்த பிறகு, ஆண்டுதோறும் சராசரியாக இரண்டு மூன்று முறை சீனாவுக்கு வருகின்றார். எனவே, இந்த ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அவர் நன்குஅறிந்துள்ளார். 1998ஆம் ஆண்டு அவர் சீனாவுக்கு வந்த போது, சில சுத்தமற்ற இடங்கள் இருந்தன. ஆனால் 2000ஆம் ஆண்டுக்குப் பின், மாநகரங்களிலோ, நடுத்தர மற்றும் சிறிய நகரங்களிலோ பசுமை தரையும் பல் வர்ண மலர்களும் எங்கெங்கும் காணப்படுகின்றன. மிகவும் அழகாக இருக்கின்றன. தெருக்கள் ஒழுங்காகவும் தூய்மையாகவும் உள்ளன என்றார். பல நகரங்களின் தெருக்கள் தாம் பல ஆண்டுகளாக குடியிருந்த ஐரோப்பிய நாடுகளின் நகரங்களைவிட மேலும் தூய்மையாக உள்ளன. ஒவ்வொரு முறையும் சீனா வந்த போது, அவர் தெருவில் உலாவ விரும்புகின்றார். சில சமயங்களில் அவர், தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து, வணிக மையத்துக்கு நடந்தே சென்றார். இதன்மூலம் அவர் உள்ளூர் மக்களின் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறைகளையும் அறிந்துகொள்ளலாம் என்று அவர் கூறினார்.

இனி, அமெரிக்காவிலுள்ள சீன செய்தியாளர் ஒருவர் வழங்கிய ஒரு செய்தி. கடந்த இரண்டு ஆண்டுகளில் பெய்சிங் நகரின் தெருக்கள் மேலும் அழகாகவும் தூய்மையாகவும் மாறியுள்ளன. மக்கள் குப்பைகளை வீசி எறியும் நிலை மிகவும் அரிது. கலிபோர்னிய மாநிலத்தைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர், 2005ஆம் ஆண்டு ஜுலை திங்களில் சீனாவுக்கு வந்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட தற்போது சிறப்பாக உள்ளது. பெய்சிங்கில் பல இடங்களில் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. ஆனாலும் கட்டுமானத் தளங்களில் தூசி மற்றும் இரைச்சலை தடுக்கும் பணிகள் அதிக ஈடுபாட்டுடன் செய்யப்படுகின்றன. பெய்சிங்கின் வீதிகளில், கருப்பு புகையை வெளியேற்றும் கார் தற்போது அறவே இல்லை என்று அவர் கூறினார்.

நேயர்கள் இதுவரை, சீன நகரங்கள் மேலும் அழகாக மாறியுள்ளன என்ற கட்டுரையைக் கேட்டீர்கள். இத்துடன் சீனாவுக்கு அப்பால் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.


1  2