• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-30 13:33:45    
சீன-இந்திய வர்த்தகத்தில் புதிய வாய்ப்பு

cri

உலகின் கூரை என்று அழைக்கப்படும் சின்காய் திபெத் பீடபூமியைக் கடந்து செல்லும் சின்காய் திபெத் ரெயில் பாதை நாளை திறந்து வைக்கப்படும். இந்த 2000 கிலோமீட்டர் நீளமான ரெயில் பாதை போடப்பட்டு போக்குவரத்துக்குத் திறந்து விடப்படுவதால், மேற்கு சீனப் பகுதியின் வளர்ச்சிக்கும், சீன-இந்திய எல்லை வர்த்தகத்தின் வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்பு கிடைக்கும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் எனும் நாளேட்டின் பத்திரிகையாளர் ராஜா மோகன் கூறினார்.
2 முறை திபெத்தில் பயணம் செய்த அவர், மேற்கு பகுதியின் வளர்ச்சி என்னும் சீன அரசின் கொள்கையால் இந்திய-சீன வர்த்தகம் வளர்ச்சி அடையும் என்று கருதுகின்றார். அவர் கூறியதாவது,
தற்போது, சீன-இந்திய உறவு சீராக வளர்ந்து வருகின்றது. சீனாவின் மேற்கு பகுதிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வளரும். மேற்கு பகுதியின் வளர்ச்சி எனும் சீனாவின் நெடுநோக்கு திட்டம், இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், சீனாவின் திபெத் தெற்கு ஆசியாவை ஒட்டி அமைந்துள்ளது. சீனாவின் மேற்கு பகுதிக்கும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கும் இடையில் மாபெரும் ஒத்துழைப்பு உள்ளாற்றல் உண்டு. மேற்கு பகுதியின் வளர்ச்சியால், திபெத் மிக விரைவாக வளர்ந்து வருகின்றது. சீன திபெத், சின்ச்சியாங், யூன்னான் ஆகிய இடங்களுக்கும் மேற்கு வங்காள மாநிலம் உள்ளிட்ட இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கும் இடையிலான எல்லை வர்த்தகத்துக்கு இது பயன் தரும் என்றார் அவர்.
மேற்கு சீனாவையும், வட இந்தியாவையும் இணைக்கும் சாலையைப் படிப்படியாகக் கட்டி முடிக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.
1  2