• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-30 13:33:45    
சீன-இந்திய வர்த்தகத்தில் புதிய வாய்ப்பு

cri

சீனாவின் எல்லைப் பிரதேசத்தில் சாலைத் தொடரமைப்பு உருவாக்கப்பட்டதுடன், இரு நாட்டு எல்லைப் பகுதியிலும் சைலைத் தொடரமைப்பை உருவாக்க இரு நாடுகளும் பாடுபட வேண்டும். திபெத்தை ஆசியாவின் ஒரு ரெயில் நிலையமாக கருதினால், பல்வேறு ஆசிய நாடுகளின் சாலைப் போக்குவரத்து தொடரமைப்பு உருவாக்கப்படும். இமயமலையால் இந்த சாலைப் போக்குவரத்து தொடரமைப்புக்கு சிக்கல் ஏற்பட்டாலும்,  சீன திபெத், சின்ச்சியாங், யூன்னான் ஆகிய இடங்களையும், திட்டமிட்டுள்ள இந்திய எல்லை பிரதேசத்தின் சாலைத் தொடரமைப்பையும் இணைக்கும் சாத்திய கூறு நிலவுகின்றது. இப்படி செய்தால், மேற்கு சீனாவுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் மேலும் எளிதாகும். சீன இந்திய ஒத்துழைப்பின் வளர்ச்சியுடன், மேற்கு சீனா மற்றும் வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு மேலும் ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்று ராஜா மோகன் தெரிவித்தார்.
சின்காய் திபெத் ரெயில் பாதையை அச்சுறுத்தலாக இந்தியா கருதவில்லை என்று அவர் வலியுறுத்தினார். இரு நாட்டு பொருளாதார வளர்ச்சி உலக பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
நாங்கள் சின்காய் திபெத் ரெயில் பாதையை அச்சுறுத்தலாகக் கருதவில்லை. லாசா நகர் இந்த பாதையின் இறுதி நிலையமாகும். மேற்கு சீனா, வடக்கு இந்தியா, கல்கத்தா முதலிய இடங்களுக்கு இடையிலான வர்த்தகத் தொடர்புக்கு இந்த ரெயில் பாதை வாய்ப்பை தருகின்றது. சீனாவும் இந்தியாவும் அடையும் வளர்ச்சி ஆசியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆகையால், இரு நாடுகள் ஒன்றை ஒன்று எதிரியாக கருதத் தேவையில்லை. சில துறைகளில் இரு நாடுகளுக்குமிடையில் போட்டி நிலவுகின்றது. ஆனால், இந்த போட்டி நியாயமானது. இது பற்றி கவலைப்பட வேண்டாம், மேலும் ஆழமான நிலையில் இரு நாடுகள் அரசியல் பேச்சுவார்த்தை நடத்தி, இத்தகைய போட்டியில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று ராஜா மோகன் கூறினார்.

1  2