• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-05 17:42:59    
தியன்சினின் சுற்று சூழல்

cri

தியன்சின் மாநகரின் பின்ஹேய் மண்டலத்தில், மின்னணு தகவல், கார் தயாரிப்பு, எண்ணெய் வேதியியல், உயிரின தொழில் நுட்பம், நவீன மருந்து, புதிய எரியாற்றல் வளர்ச்சி முதலியவற்றை முதுகெலும்பாக கொண்ட, தொழில் துறை கட்டமைப்பு உருவாயிற்றது. ஆனால், பொருளாதார வளர்ச்சியுடன் ஒருங்கிணைந்த பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச் சூழல் வளர்ச்சியை நிலைநிறுத்த கவனம் செலுத்தப்பட வேண்டும். கழிவு உருக்கு மீண்டும் உருக்கப்படுவது, தொழில் துறையின் கழிவுகள் கையாள்வது முதலிய சுற்று சூழல் திட்டப்பணிகளின் வளர்ச்சி, இம்மண்டலத்தில் ஆதரவைப் பெற்றுள்ளது. தற்போது, இம்மண்டல்ததிலுள்ள 500க்குக் கூடுதலான கிலோமீட்டர் சதுப்பு நிலம், பயனுள்ள முறையில் பாதுகாக்கப்பட்டது. அதன் பசுமைமயமாக்கல், 35 விழுக்காட்டை எட்டியது. மண்டலத்தில் கழிவு நீர் கையாளப்பட்ட பின், நீர் தரம், குடிநீர் வரையறையைத் தாண்டியுள்ளது.

சீன எண்ணெய் வேதியியல் தொழில் பங்கு நிறுவனத்தின் தியான்சின் கிளையின் பூங்காவில், மான்னும், மயிலும் நடந்து செல்கின்றன. பல்வேறு வகை மரங்கள், மலர்கள் அதிகமாக காணப்படுகின்றன. எண்ணெய் வேதியியல் உற்பத்தியினால் சுற்றுச் சுழலில் ஏற்பட்ட பாதிப்பைக் குறைப்பதில், தியான் சின் எண்ணெய் வேதியியல் தொழில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது என்று, அதன் பொறுப்பாளர் சாங் வான் சியுன் அறிமுகப்படுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது:

பசுமைமயமாக்கல் மூலம், சுற்றுச் சுழலை மேம்படுத்தி, கழிவுப் பொருட்களைக் கையாண்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, கழிவு நீர் வடிக்கப்படும் முன், எமது தொழிற்சாலையில் கையாளப்பட வேண்டும். பிறகு, கழிவு நீரை கையாளும் சிறப்பு தொழிற்சாலையில் வடிக்கப்பட்டு, நாட்டின் வரையறையை எட்டிய பிறகு, ஆற்றுக்கு வடிக்கப்படும் என்றார் அவர்.

1  2