 சீனாவின் வட பகுதியில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால், நவீன நகரான தாங் சான் நகரத்தை நீங்கள் கடந்து செல்லக் கூடும். அங்கு, வசதியான போக்குவரத்து தொடரமைப்பும், புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலமும் உள்ளன. அங்குள்ள முழுமையான அடிப்படை வசதிகள் பல பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்த்துள்ளன. மகிழ்ச்சி தரும் சூழலினால் அங்குள்ள மக்கள் அமைதியாக வாழ்ந்து, மகிழ்ச்சியுடன் வேலை செய்கின்றனர். ஆனால், இந்த அழகான நகரம், 30 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு இடிபாடாக இருந்தது.
 
நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் மிக கடுமையான நிலநடுக்கமாக 1976ஆம் ஆண்டு ஜுலை திங்கள் 28ஆம் நாள் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு 150 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தாங் சான் நகரில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. இதில் 24 பேர் மக்கள் உயிரிழந்தனர், 16 ஆயிரம் பேர் காயமுற்றனர், 1000 கோடி யுவானுக்கு மேலான நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
இந்த இயற்கை சீற்றம் மக்களின் மனதில் துயரச் சம்பவமாக ஆழ பதிந்திருக்கிறது. ஆனால், தற்போது, தாங் சான் நகரிலுள்ள முக்கிய பாதையான சின் ஹுவா பாதையில் நடை போட்டால், இத்தகைய காட்சியை நீங்கள் காணலாம்—பாதைக்கு தென் பக்கத்தில், பாழடைந்த வீடுகளும், மரங்களும் உள்ளன. ஏனென்றால், நிலநடுக்கத்துக்கு முன் அங்கு வாழ்ந்த மக்கள் அனைவரும் வெளியேறியுள்ளனர். பாதைக்கு வட பக்கத்தில், வெவ்வேறான காட்சியை நீங்கள் காணலாம். வீதியில் மக்கள் அதிகம். உயரமான கட்டிடங்கள், தரமிக்க கார்கள் ஆகியவை பாக்க்கும் இடத்திலெல்லாம் காணப்படலாம். தாங் சான் மக்களைப் பொறுத்த வரை, சின் ஹுவா பாதையினால் கடந்த காலமும் நிகழ்வு காலமும் பிரிக்கப்படுகிறது. இப்பாதையின் ஒரு பக்கத்தில் துக்கமான நினைவும், மற்றொரு பக்கத்தில் புதிய வாழ்க்கை மீதான நம்பிக்கையும் நிறைந்து காணப்படுகிறது.
1 2
|