
நிலநடுக்கம் நிகழ்ந்ததற்கு பிந்தைய 30 ஆண்டுகளில், தாங் சான் நகரவாசிகளின் வருமானம் வேகமாக அதிகரித்துள்ளது. 2005ஆம் ஆண்டில் நகரவாசிகள் தனிநபர் வருமானம் 1975ஆம் ஆண்டில் இருந்ததை விட சுமார் 40 மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது, கணினி மற்றும் உடல் பயிற்சிக்கான வசதிகளைத் தவிர, வீடு மற்றும் கார் ஆகியவை, நகரவாசிகள் வாங்க விரும்பும் நுகர்வு பொருட்களாக மாறியுள்ளன. அண்மையில் நடைபெற்ற 2வது தாங் சான் சர்வதேச கார் கண்காட்சியின் போது, 410 கார்கள் விற்கப்பட்டன. 7 கோடியே 10 லட்சம் யுவான் மதிப்புள்ள விற்பனை தொகை காணப்பட்டது. தாங் சான் நகரில், ஐந்து பேர்களில் ஒருவர் கார் ஒன்றை கொண்டிருக்கிறார். இந்த உயர்வான விகிதம் மக்களை வியப்படையச் செய்கிறது. வீட்டுப் பயன்பாட்டு காரை வாங்குவதன் மீதான தாங் சான் நகரவாசிகளின் ஆர்வம், இந்நகரின் நுகர்வு ஆற்றலை போதியளவில் பிரதிபலிக்கிறது.
கடந்த 30 ஆண்டுகாலம், தாங் சான் மக்களை துன்பத்திலிருந்து தட்டி எழுப்பியது மட்டுமல்லாது. அவர்களை நீண்டகால வளர்ச்சி திட்டத்தை வகுக்கும்படியும் செய்துள்ளது. சீனாவின் கடலோர பிரதேசத்தில் திறந்த நகரங்களில் ஒன்று என்ற முறையில், கடந்த சில ஆண்டுகளில், தாங் சான் நகரம் அந்நிய முதலீட்டை பயன்படுத்தும் அளவு மற்றும் தரம் உயர்ந்து வருகிறது. இவ்வாண்டின் முற்பாதியில், தாங் சான் நகரம் 31 கோடி அமெரிக்க டாலர் அந்நிய முதலீட்டை பயன்படுத்தியுள்ளது. இது கடந்த ஆண்டில் அதே காலத்தில் இருந்ததை விட 30 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்தது. இந்நகரம் அமைந்துள்ள ஹோபெய் மாநிலத்தில் இது முதலிடம் வகித்தது. சொந்தமான மூலவள மேம்பாட்டைப் பயன்படுத்தி தொழில் துறையை வளர்த்து, வணிகர்களையும் முதலீட்டையும் ஈர்ப்பது என்பது, கடந்த சில ஆண்டுகளில் தாங் சான் நகரின் முக்கிய வளர்ச்சி திட்டமாகும் என்று இந்நகரின் வணிக அலுவலகத்தின் முதலீட்டு பிரிவுத் தலைவர் சை ஹோங் சேங் செய்தியாளரிடம் கூறினார்.
மக்களின் கவனத்தை ஈர்க்கும் சௌ பெய் தியன் தொழில் துறை மண்டலத்தின் கட்டுமானம் தாங் சான் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. அதே வேளை, 7 மாநில நிலை பொருளாதார மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி பூங்காக்கள் கட்டப்பட்டுள்ளன. உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் தொழில் நிறுவனங்கள் சலுகை கொள்கையினால் அங்கு ஈர்க்கப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் தாங் சான் நகரின் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் இந்நகரின் பொருளாதார தொகை 20270 கோடி யுவானை எட்டியது. அதன் பண வருவாய் 2260 கோடி யுவானாகும். 2000ஆம் ஆண்டில் இருந்ததை விட அவை ஒரு மடங்கிற்கு மேலாக அதிகரித்தன. எதிர்காலத்தில் வெளிநாட்டுத் திறப்பு பணியை தாங் சான் நகர் தொடர்ந்து மேம்படுத்தும். பொருளாதாரத்தை வளர்க்கும் அதே வேளையில் பொது மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட்டு, இணக்கமான, அமைதியான நவீன நகரம் உருவாக்கப்படும் என்று இந்நகரின் பொருளாதார துறைக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் செய்தியாளரிடம் கூறியுள்ளார். 1 2
|