• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-16 22:40:06    
எஃகுத் தொழிலாளர் Zhu Zhi Sheng

cri

கடந்த மே முதல் நாள் சர்வதேச தொழிலாளர் விழாவாகக் கொண்டாடப்பட்டது. கிழக்கு சீனாவின் Zhe Jiang மாநிலத்தில் உள்ள Hang Zhou எஃகுக் குழுமத்தின் பணியாளர் Zhu Zhi Shengஐப் பொறுத்த வரை, அது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். ஏனெனில், அந்த நாளில், மே தினம் தொழிலாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. சீனாவில் ஒவ்வொரு தொழிலாளரும் உன்னதமான இந்த விருதைப் பெற விரும்புகின்றனர்.

Hang Zhou எஃகு குழுமத்தின் நிறுவனத்தில், 37 வயதான Zhu Zhi Sheng பணியாற்றுகிறார். அந்தக் குழுமம், சுமார் 50 ஆண்டுகள் வரலாறுடையது. சீனாவின் மிகப் பெரிய 500 தொழில் நிறுவனங்களில் இது 94வது இடம் வகிக்கின்றது.

பத்து ஆண்டுகளுக்கு முன், இந்த நிறுவனம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய போது Zhu Zhi Sheng சீனியர் பள்ளியில் படித்துப் பட்டம் பெற்று, தனது ஊரில் விவசாயியாக வேளாண் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரின் ஊர், Hang Zhou நகரிலிருந்து 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவிலுள்ள ஒரு மலைப் பகுதியில் அமைந்துள்ளது. சிறு வயதிலிருந்தே தொழிலாளராக மாற விரும்பிய Zhu Zhi Sheng அந்த நிறுவனத்தில் சேர உடனடியாக விண்ணப்பித்தார். தேர்வு நடத்தி, எஃகு ஆலைப் பணியாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

Zhu Zhi Sheng எஃகு ஆலைக்கு முதல்முறையாக சென்ற போது, கொதிக்கும் சூடான எஃகு உலையைக் கண்டு, பயந்தார்.

"அப்போது கொழுந்து விட்டு எரியும் தீயைக் கண்டு நான் பயந்தேன்." என்றார்.

எஃகு உலையின் முன்னால், இரும்பை உருக்குதல் கடினமான பணியாகும். Zhu Zhi Sheng ஆலையில் சேர்வதற்கு முன், நகரத் தொழிலாளர்கள் இப்பணியில் நீண்டகாலம் வேலை புரியவில்லை. ஆனால், குழந்தைப் பருவத்திலிருந்தே கிராமப்புறத்தில் வாழ்ந்த Zhu Zhi Sheng, களைப்புக்கு அஞ்சாமல் இப்பணித்தலத்தில் உறுதியாக நின்றார். முதலில், எஃகு உருக்கு தொழிலாளரின் உதவியாளராக அவர் வேலை செய்தார். பல்வகை வேலைகளில் புடம் போட்டெடுக்கப்பட்டு, இறுதியில் அதிகாரப்பூர்வ எஃகு தொழிலாளராக அவர் மாறியுள்ளார்.

எஃகு தொழிலாளரைப் பொறுத்த வரை, முதலில், தீ எரிவதைக் கண்காணிக்கும் தொழில் நுட்பத்தை புரிந்து கொள்ள வேண்டும். இத்தொழில் நுட்பத்தைப் புரிந்து கொள்ள, Zhu Zhi Sheng பல இன்னல்களை சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. 1700 celsius வெப்பமுடைய எஃகு உலையின் முன்னால், சில நிமிடத்துக்கு பின் எவரும் வியர்வையில் நனைந்து விடுவர். எஃகு உருக்கின் ஒவ்வொரு நடைமுறையையும் அறிந்து கொள்ளும் வகையில், எஃகு உலை முன்னால் மணிக்கணக்காக நின்று எரியும் தீயின் மாற்றத்தைக் கண்காணித்தார். 6 திங்களுக்கு பின், இந்த முக்கிய தொழில் நுட்பத்தை அவர் புரிந்து கொண்டார்.

ஆனால், Zhu Zhi Sheng மனநிறைவின்மை அடைகின்றார். விவசாயிகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது, தொழிலாளர்கள் சில பண்பாட்டு அறிவுகளை கொள்ள வேண்டும் என்று அவர் கருதுகின்றார். அவர் கூறியதாவது:

"தொழிலாளர்களுக்கு சில தொழில் அறிவுகளும், அலுவல் மற்றும் நிர்வாக ஆற்றலும் தேவைப்படுகின்றன. ஒரு நல்ல தொழிலாளராக மாறுவதற்கு இது இன்றியமையாதது" என்றார்.

1  2