• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-16 22:40:06    
எஃகுத் தொழிலாளர் Zhu Zhi Sheng

cri

முழு ஈடுபாட்டுடன் வேலை செய்யும் Zhu Zhi Sheng, தரமிக்க எஃகை உருக்க, பல்வேறு வழிமுறைகளை ஆராய்கின்றார். கூடுதல் எஃகு உருக்கு தொழில் நுட்பங்களை கிரகித்து, தேர்ச்சி பெற்று, தத்துவ அறிவுகளை அதிகரிக்கும் பொருட்டு, எஃகு உருக்கு பற்றிய பல நூல்களை அவர் வாங்கினார். ஓய்வு நேரத்தில் அவர் இந்நூல்களை படித்தார்.

Zhu Zhi Shengயின் முயற்சிகளினால், அவர் உருக்கிய எஃகில் விரிசல் விழுவது குறைந்துள்ளது. உருகிய எஃகு தாமதமாக வழிவது என்ற பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. தற்போது, Hang Zhou எஃகு நிறுவனத்தில் எஃகை உருக்கும் போக்கில் பொதுவாக பயன்படும் பல முன்னேறிய செயல்முறைகள், Zhu Zhi Shengஆல் புதுப்பிக்கப்பட்டவை. சில வழிமுறைகளுக்கு Zhu Zhi Sheng என்ற பெயர் சூட்டப்பட்டது. சில செயல்முறைகள், எஃகு தூய்மையைப் பெரிதும் உயர்த்தியுள்ளன. எஃகு வெளியே வரும் நேரம் பெரிதும் குறைந்துள்ளது. ஆலையில் ஒரு தொழில் நுட்பம் பரவலாக்கப்பட்ட பின், திங்கள் சராசரி எஃகு உற்பத்தி அளவு, 2 ஆயிரம் டன் அதிகரித்துள்ளது. சுமார் 8 லட்சம் யுவான் செலவு குறைந்துள்ளது. தொழில் நிறுவனம் பெரும் பயனடைந்துள்ளது.

தலைசிறந்த பணியின் காரணமாக, 6 ஆண்டுகளுக்கு முன், இந்த நிறுவனத்தில் எஃகு உருக்கு அணி ஒன்றின் தலைவராக Zhu Zhi Sheng பதவி ஏற்றார். முன்னதாக தொழில் நிறுவனத்தில், இந்த அணியின் பல்வகை உற்பத்தி இலக்குகள் பின்தங்கியிருந்தன. Zhu Zhi Sheng பதவி ஏற்ற பின், தொழிலாளர்களின் நிர்வாகத்துக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். தவிர, தொழிலாளர்கள் அனைவரின் ஆற்றலை ஒன்றிணைத்து, ஒவ்வொருவரின் ஊக்கத்தை எழுப்புவதில் அவர் கவனம் செலுத்துகின்றார். அவரின் தலைமையில், இந்த அணியில் அனைத்துத் தொழிலாளர்களும் பணியில் பெரிதும் ஈடுபடுகின்றனர். இந்த அணியில் வேலை செய்த Luo Ji Lai கூறியதாவது:

"அணியில் ஒவ்வொரு தொழிலாளரின் ஊக்கத்தை எழுப்புவதற்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். அவரின் தலைமையில், நாங்கள் நல்ல மனநிலையில் உள்ளோம்." என்றார்.

இந்த அணியை மேலும் செவ்வனே நிர்வகிக்கும் பொருட்டு, நிர்வாகத்துறையில் கூடுதல் திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று Zhu Zhi Sheng கருதுகின்றார். இதனால், 3 ஆண்டுகளுக்கு முன், சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் மேலாண் இயல் துறையில் அவர் சேர்ந்தார்.

Zhu Zhi Shengயின் தலைமையில், இந்த அணியில் மாபெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக, இந்த அணி எட்டிய பல்வகை இலக்குகள், ஆண்டுதோறும் நிறுவனத்தின் 12 அணிகளில் முதலிடம் வகிக்கின்றது.

தலைசிறந்த எஃகு உருக்கு தொழில் நுட்பங்கள் மற்றும் நிர்வாக சாதனையினால், Zhu Zhi Sheng பல விருதுகளை பெற்றுள்ளார். 2003ஆம் ஆண்டில், "Hang Zhou நகருக்கு வந்து வேலை செய்யும் 10 தலைசிறந்த இளைஞர்களில்" ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த மே தினம் சர்வதேசத் தொழிலாளர் விழாவின் போது, அவர் தலைநகர் பெய்ஜிங்கிற்கு வந்தார். தொழிலாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மே தினம் தொழிலாளர் விருதை அவர் பெற்றார்.

"தொழிலாளர்கள் வலிமை மிக்கவர்" என்னும் இந்தப் பாடலை Zhu Zhi Sheng மிகவும் விரும்புகின்றார். தொழிலாளர்களின் உறுதியையும் பரந்த மனப்பான்மையையும் இப்பாடல் வெளிப்படுத்துவதாக அவர் கூறினார். இப்பாடல் ஒலியுடன் இன்றைய சமூக வாழ்வு நிகழ்ச்சி நிறைவடைகின்றது.


1  2