
பல்வேறு தேசிய இனங்களும் இணக்கமாக வாழ்கின்றன
காலப் போக்கில், ஹன் இன மக்களை முக்கியமாகக் கொண்ட, பல தேசிய இன மக்கள் ஒரே இடத்தில் கலந்து வாழும் நிலைமையும் ஒரு சிறுபான்மை தேசிய இன மக்கள் ஒரே இடத்தில் குழுமி வாழும் நிலைமையும் உருவானது. 55 சிறுபான்மை தேசிய இனங்களில், ஹூய் மற்றும் மஞ்சு இன மக்கள் சீன மொழியைப் பொதுவாக பயன்படுத்துகின்றனர். ஏனைய இனத்தவர்கள், சொந்த மொழி அல்லது சீன மொழியைப் பயன்படுத்துகின்றனர். பல ஆண்டுகளாக, 96 லட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில், 56 தேசிய இனங்கள் கூடி வாழ்ந்து, குடும்பங்களை வளர்த்து, நீண்டகால வரலாற்றையும் ஒளிமயமான பண்பாட்டையும் உருவாக்கி வருகின்றன.

சீனாவில் முக்கிய மதங்கள்
பல மதங்கள் கொண்ட நாடாக சீனா திகழ்கிறது. புத்த மதம், தௌ மதம், இஸ்லாமிய மதம், கத்தோலிக்க மதம், கிறிஸ்துவ மதம் ஆகியவற்றின் மீது முக்கியமாக நம்பிக்கை கொள்ளப்படுகிறது. அண்மையில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதத் துறை பிரமுகர்கள் பேசுகையில், சீனாவில் மத நம்பிக்கை சுதந்திரத்தை போதியளவில் அனுபவிக்கலாம், மத நம்பிக்கை மற்றும் பழக்கவழக்கங்களுக்கு சீன அரசு ஆக்கப்பூர்வமாக பராமரிப்பையும் மதிப்பையும் தந்துள்ளது என்று கூறினார்கள்.
கிறிஸ்துவ மதம்
கிறிஸ்துவ மதம், கி.பி. 19வது நூற்றாண்டில் மேலை நாடுகளிலிருந்து சீனாவில் பரவியது. இம்மதத்தின் பரவலுடன், bibleவும் சீனாவில் பெருவாரியாக வெளியிடப்பட்டது. 1990ஆம் ஆண்டு முதல், சீன கிறிஸ்தவர்களின் முயற்சியுடனும் அரசின் ஆதரவுடனும் bibleஇன் வெளியீடு மற்றும் விற்பனை, ஒரு விரிவான தொடரமைப்பாக உருவாகியுள்ளது. மேலும், மதத்தை பரப்பும் சுதந்திரத்தை சீனக் கிறிஸ்துவர்கள் போதியளவில் அனுபவிக்கின்றனர். மத வழிபாட்டு இடங்களில் அவர்கள் மத நடவடிக்கையில் ஈடுபடுவது மட்டுமல்ல, சுதந்திரமாக மற்றவருக்கு கிறிஸ்துவ மறையினை பிரச்சாரமும் செய்யலாம்.
கத்தோலிக்க மதம்
மேலை நாடுகளிலிருந்து வந்த கத்தோலிக்க மதம், கிறிஸ்துவ மதத்தை விட 1000 ஆண்டுகளுக்கும் முன் சீனாவில் பரவியது. கடந்த சில ஆண்டுகளில், கத்தோலிக்க மதம் சீனாவில் விரைவாக வளர்ந்து வருகிறது. புள்ளிவிபரங்களின்படி, தற்போது சீனாவில் 50 லட்சத்துக்கு அதிகமான கத்தோலிக்க மதத்தவர்கள் உள்ளனர். 1 2 3
|