• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-22 15:57:48    
பேச்சோடு பேச்சாக

cri
ஓட்டப் பந்தயத்தில் ஆமையிடம் தோற்ற முயல் பற்றிய கதையைச் சிறு வயதில் படித்திருக்கிறோம். அளவுக்கு மீறிய தன்னம் பிக்கையால் என்ன கேடு வரும் என்பதற்கு அது ஓர் எடுத்துக்காட்டு. அதே நேரத்தில், கொடூரமான சிங்கத்திடம் வஞ்சகமாகப் பேசி, ஏமாற்றிக் கொன்ற தந்திரக்கார முயல் பற்றியும் படித்திருக்கிறோம். சிறுமுயலின் தந்திரத்தையும், அறிவுக்கூர்மையையும் போற்றும் கதைகள் சீனாவிலும் உள்ளன. ஜியாவ் த்து சன் கு-அதாவது புத்திசாலியான முயலுக்கு மூன்று குழிகளாம். பொதுவாக முயல்கள் குழிகளுக்குள் பதுங்கி இருப்பது தான் வழக்கம். கெட்டிக்கார முயல், தான் பதுங்கிக் கொள்ள மூன்று குழிகளைத் தோண்டிக் கொள்ளுமாம். எல்லாம் எதிரிகளை ஏமாற்றத்தான். பயங்கரவாதம் கடைச்சரக்காக மலிந்து விட்ட இந்த நாளில், தலைவர்கள் தங்களின் தற்காப்புக்காக, தங்களைப் போன்ற போலிகளை உலவ விடுவதில்லையா? இந்திராகாந்தி ஒரே மாதிரியான மூன்று கார்கள் வர, அவற்றில் ஏதாவது ஒன்றில் உட்கார்ந்து செல்வதைப் பார்த் திருக்கிறேன். உயிரைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல, எப்போதுமே எந்த ஒரு திட்டத்திற்குமே, பல மாற்றுத் திட்டங்கள் இருப்பது நல்லது அல்லவா?

அதே போல, நாம் யாரைச் சார்ந்திருக்கிறோமோ, அவர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பது நமக்கு நல்லது. முயலுக்கு உணவு புல் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் முயல் தனது பதுங்கு குழிக்கு அருகில் உள்ள புல்லைத் தின்னாதாம். துஸி பு ச்சி வொ பியான் சாவ்-என்கிறார்கள் சீனர்கள். பதுங்கு குழிக்கு அருகில் உள்ள புல்லை முயல் தின்று விட்டால், அதன் மறைவிடம் அம்பல மாகி விடுமே! ஒரு தலைவன் தனனைச் சார்ந்துள்ள தொண்டர்களை-அல்லது வாழ்க வாழ்க என்று முழக்கமிடுவ தற்காகத் தான் சார்ந்துள்ள தொண்டர்களை-ஆபத்துக்கு உள்ளாக்கினானால் கடைசியில் தன்வினைத் தன்னைச் சுடும் என்கிற நிலை வந்து விடும்.

1  2