• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-22 15:57:48    
பேச்சோடு பேச்சாக

cri

வாழ்க்கையில் அதிர்ஷ்டக் காற்று நம்பக்கம் வீசாதா என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கித் தவிப்பவர்களை ஷோ சு தய் த்து (Shou Zhu Dai Tu) என்று சீனர்கள் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். அதாவது முயல் வேட்டைக்குப் போய் விட்டு, முயல் பதுங்கியுள்ள குழிகளைத் தேடித் திரியாமல், "இங்கதானே வரணும், வரட்டும் ஒரே போடா போடுறேன்" என்று மரத்தடியிலேயே காத்திருக்கும் சோம் பேறி வீரர்களிடம் முயலும் சரி, அதிர்ஷ்டமும் சரி எளிதில் சிக்குமா? முயன்றால்தானே முன்னேறலாம்!

முயல் இறக்குமானால் அது மற்ற பிராணிகளுக்கு ஓர் அபாய எச்சரிக்கை என்கிறார்கள் சீனர்கள். எப்படி என்கிறீர்களா? முயல் வேட்டைக்கு வேட்டை நாய்களோடு போகிறவன், எல்லா முயல்களையும் வேட்டையாடி முடித்த பின், கடைசியில் தனது உணவுக்காக வேட்டை நாய்களையே கொல்வானாம்-த்து ஸி கோவ் பெங் (Tu Si Gou Peng). நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்திலே ஆள்குறைப்பு செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் வேலைத் திறமையிலே பெரிய எம்டனாக இருக்கலாம். வட இந்தியாவில் சொல்வது போல, எந்த ஒரு வேலையும் உங்களுக்கு பாயே ஹாத்கா கேல் என்பதாக-இடது கைவிளையாட்டு போல சுலபமானதாக இருக்கலாம். உங்களுடைய பக்கத்து இருக்கையில் இருப்பவரை நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பினால், அவரிடம் உங்களுக்கு என்னதான் போட்டி பொறாமை இருந்தாலும் வெற்றி விழாக் கொண்டாடக் கூடாது. ஏனென்றால், முயல் இறந்தால் ஓநாய் துக்கம் அனுசரிக்க வேண்டும்- து சி ஹு பெய் (Tu Si Hu Bei) என்கிறார்கள் சீனர்கள். இன்றைக்கு முயலுக்கு வந்த கதி, நாளைக்கு ஓநாய்க்கும் ஏற்படலாம். ஏனென்றால், முயலுக்கு வால் நீளமானது அல்ல. துஸி வெய்பாச்சாங் பு லியாங்-முயலின் கதை சீக்கிரமே முடிந்து விடும். அப்புறம் உங்களுடைய முறை வந்து விடும்.


1  2