
நு இனம், சீனாவில் குறைவான மக்கள் தொகையுடைய தேசிய இனங்களில் ஒன்றாகும். முக்கியமாக, தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தின் நு சியாங் ஆற்றின் கரையோரத்தில் அவர்கள் வாழ்கின்றனர். அங்கு உயர்ந்த மலைகள் இருப்பதால், போக்குவரத்து வசதி மோசம். எனவே, நீண்டகாலமாக நு இனத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சி ஒப்பீட்டளவில் பின்தங்கிய நிலையில் இருந்துள்ளது. இன்றோ, உள்ளூர் அரசின் நிதியுதவியுடன், சில நு இன குடும்பங்கள், "சுற்றுலாத் தொழிலில்" ஈடுபட்டு, அதன் மூலம் வளமடையும் பாதை ஒன்றைத் திறந்து வைத்தனர். வாருங்கள் நேயர்களே! இன்றைய நிகழ்ச்சியில், நு இனக்கிராமமான ஜியா சங் கிராமத்துக்குப் போய், நு இன வாழ்க்கையில் சுற்றுலாத் தொழில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தைப் பார்க்கலாம்.

லியூ யாங் ஹைய் என்னும் கிராவாசியின் வீட்டில் நுழைந்ததுமே ஒரே பரபரப்பு. அவர், விருந்தினர்களை உபசரிப்பதில் மும்முரமாக இருப்பதைக் கண்ட எமது செய்தியாளர், அவருடைய வசதியான வாழ்க்கை நிலையை பார்த்து வியந்து பாராட்டினார். ஒதுக்குப்புறத்திலுள்ள மலைப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் இந்த நு இனக்குடும்பம், முன்பு, வறுமை மற்றும் பின்தங்கிய நிலைமையால் அல்லல்பட்டது. ஆனால், இப்போது நிலைமை மாறி விட்டது. வீட்டில், வண்ண தொலைக்காட்சிப்பெட்டி, குளிர் பதனப்பெட்டி, சலவை இயந்திரம், இசைப்பெட்டிகள் எல்லாம் உள்ளன. செய்தியாளரிடம் பேசுகையில், முன்னர், குடும்பத்தில் மிகவும் வறுமை நிலவியது. சுற்றுலாத் தொழில் நடத்தத் துவங்கியது முதல், எனது வாழ்க்கை நாளுக்கு நாள் வளமடைந்து வருகிறது என்று லியூ யாங் ஹைய் கூறினார்.
"தேசிய இன சுற்றுலாத்தொழிலில் ஈடுபடுவதற்கு முன், எனது குடும்பத்துக்கு வருமானம் குறைவு. பயிரிடுதல், கோழி விற்பனை முதலியவற்றில் ஈடுபட்டோம். வாழ்க்கையில் பல இன்னல்கள்" என்றார்.
1 2
|