
நு இன பெண்கள்
6 ஆண்டுகளுக்கு முன், நு இனத்தவர்கள், வறுமையிலிருந்து விடுபட்டு, வளமடையச்செய்திடும் வகையில், நு சியாங் ஆற்று கரையோரத்தில் உள்ள தனித்தன்மை வாய்ந்த மேம்பாட்டினைப் பயன்படுத்தி, கிராமவாசிகள் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட உதவுவது என உள்ளூர் அரசு முடிவு செய்தது. கிராமவாசிகளின் ஊக்கத்துடன், லியூ யாங் ஹைய், உற்றார் உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் கடனாக பணம் வாங்கி, சில வீடுகளைக் கட்டி, "விவசாயி சுற்றுலா" என்ற தொழிலைத் தொடங்கினார். அதற்குப் பின், மாவட்டங்கள்-மாநிலங்களிலிருந்து மேலும் அதிகமான பயணிகள் வருகை தந்துள்ளனர். அவர்கள், நு இன வகை உணவுகளை விரும்பிச் சாப்பிடுகின்றனர். நு இன ஆடல் பாடல்களைக் கண்டு ரசித்து மகிழ்கின்றனர்.
சுற்றுலாத் தொழிலை நடத்தத் துவங்கிய பின், கடந்த 6 ஆண்டுகளில், குறைந்தது ஆண்டுக்கு பத்தாயிரம் அல்லது இருபதாயிரம் யுவான் வருமானம் அதிகரித்துள்ளது. இப்பணத்தைக் கொண்டு, கடனைத் திருப்பிச் செலுத்தியதோடு, குடும்பப் பயன்பாட்டு மின் கருவிகளையும் வாங்கியதாகவும், வங்கியில் பண சேமிப்பு இருப்பதாகவும் அவர் சொன்னார்.

நு இனத்தவர்
லியூ யாங் ஹைய் வீட்டுப் பக்கத்தில், நு இன ஆடையணிந்த பெண்மணி ஒருத்தி, எங்களை ஈர்த்தார். அவளது ஆடை, சுதேச துணியால் தைக்கப்பட்டது. அவளது வீட்டின் தோற்றம், லியூ யாங் ஹையின் தோற்றத்தை விட பெரியது. ஒரு சிறிய குளம், சில அலங்கார மலைகள் இதில் கட்டப்பட்டன. குளத்தின் ஓரத்தில் சிறிய பந்தல் போடப்பட்டுள்ளது. இந்த பெண்மணியோ, விவசாயி சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
அவளது பெயர், கெய்சு. 23 வயதான அவள், 2000ம் ஆண்டில் இத்தொழிலில் ஈடுபடத் துவங்கினார். அதற்கு முன், அவளது தந்தை மாவட்டத்தில் பணிபுரிந்தார். தாய், கிராமத்தில் ஒரு சிறிய கடையை நடத்தி வந்தார். அவளோ வெளியூரில் வேலை பார்த்தார். குடும்பத்தின் வாழ்க்கை, கிராமத்திலுள்ள இதர குடும்பங்களை விட நல்லதாயினும், அவ்வளவு வளமல்ல. பின்னர், விவசாயி சுற்றுலா தொழிலை நடத்தத் துவங்கிய பின், பயணிகள் அதிகமாக வருவதால், பணிக்கு ஆட்கள் போதாமல், கெய்சு வெளியூரிலிருந்து வீடு திரும்பினார். செய்தியாளரிடம் பேசுகையில், "விவசாயி சுற்றுலா தொழில்" என்பது, குடும்பத்துக்கு வருமானத்தை அதிகரித்துள்ளது. அன்றி, நு இனப் பண்பாட்டைப் பிரச்சாரம் செய்து பாதுகாக்கும் பங்கினை ஆற்றுகின்றது என்று கூறினார். பயணிகளை வரவேற்கும் போது நு இனத்தின் பல பழக்க வழக்கங்கள் செய்து காட்டப்படுகின்றன என்றார், அவள். 1 2
|