• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-04 00:27:48    
ரென்மின்பியின் வட்டி விகித அதிகரிப்பு

cri

கடந்த ஆக்ஸ்ட் 19ம் நாளன்று, சீன மத்திய வங்கியான சீன மக்கள் வங்கி, ரென்மின்பியின் வைப்பு தொகை மற்றும் கடன் வழங்குதலுக்கான வட்டி விகிதத்தை, 0.27 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவ்வாண்டில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுவது, இது, இரண்டாவது முறையாகும். அளவுக்கு மீறிய முதலீடு மற்றும் கடனின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவது, இச்செயலின் முக்கிய நோக்கமாகும். அத்துடன், இந்த முறை, பொது மக்களின் வாழ்க்கைக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதில் கவனம் செலுத்தி, வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டில், சீனப் பொருளாதாரம், 10 விழுக்காட்டுக்கு மேல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. நிலையான சொத்துக்களில் முதலீடும், ஏற்றுமதியும், பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியை தூண்டுகின்ற முக்கிய காரணங்களாகும். இவ்வாண்டின் முற்பாதியில், நிலையான சொத்துக்களிலான முதலீடு, 2005ம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட சுமார் 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. பல்வேறு வணிக வங்கிகள் வழங்கிய ரென்மின்பி கடன் தொகை, ஆண்டு முழுவதற்கான இலக்கில் சுமார் 90 விழுக்காட்டை எட்டியது. அதிகமாக முதலீடு செய்வதாலும் கடன் பெறுவதாலும், சில தொழில் துறைகள் கட்டுப்பாடின்றி விரிவடைந்து, சீன பொருளாதார கட்டமைப்பில் ஏற்றத்தாழ்வையும், எரியாற்றல் மற்றும் மூலவள நெருக்கடியையும் தீவிரமாக்கியுள்ளன. இதனால் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி குறைக்கப்பட்டது. எனவே, கடந்த ஏப்ரல் திங்களில் மத்திய வங்கி, கடன் வட்டி விகிதத்தை, 0.27 விழுக்காடு அதிகரித்தது.

பொருளாதார வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் கோணத்தில் பார்த்தால், அளவுக்கு மீறி வேகமாக அதிகரிக்கும் முதலீட்டையும் கடனையும் கட்டுப்படுத்துவது, இந்த முறை வட்டி விகித அதிகரிப்பின் நோக்கமாகும் என்று, சீன அரசவையைச் சேர்ந்த வளர்ச்சி ஆய்வு மையத்தின் நிதி நிபுணர் சியா பின் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

எதிர்காலத்தில் பொருளாதாரம் நிதானமாக வளர்ச்சியடைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நெடுங்காலக் கடன், நிலையான சொத்து உள்ளிட்ட நெடுங்கால முதலீட்டுடன் இது தொடர்புடையது. நெடுங்கால முதலீடு அளவுக்கு மீறி அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, நீண்டகால கடனின் வட்டி விகிதம் உயர்த்தப்பட வேண்டியுள்ளது என்றார் அவர்.

1  2