• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-04 00:27:48    
ரென்மின்பியின் வட்டி விகித அதிகரிப்பு

cri

வங்கியின் கடன் வட்டி விகிதத்தை அதிகரிப்பதால், தொழில் நிறுவனங்கள் கடன் பெறும் செலவு அதிகரித்து, முதலீடு செய்வதில் ஊக்கம் குறைகிறது. இதனால், முதலீடு மற்றும் கடன் அளவுக்கு மீறி வேகமாக அதிகரிக்கும் நிலைமையைக் கட்டுப்படுத்தலாம் என்றும் சியா பின் கூறினார்.

ஏப்ரல் திங்களின் கொள்கைகளை விட, இந்த முறை வட்டி விகித அதிகரிப்பின் நோக்கம் வேறுபட்டது. இவை, சீன அரசின் பொருளாதார கொள்கைகளின் மனிதாபிமானத் தன்மையை வாய்ந்த எடுத்துக் காட்டுகின்றன என்று இத்துறையில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

முதலில், இம்முறை, வைப்பு தொகை மற்றும் கடன் வழங்குதலுக்கான வட்டி விகிதம் ஒரே நேரத்தில் உயர்த்தப்பட்டது. உடனே, சீன மக்கள் பலர், வங்கிகளில் போட்டுவைத்த பணத்தை குறிப்பிட்ட காலத்திற்கான வைப்பு நிதியாக மாற்றிவிட்டனர். பெய்ஜிங்கிலுள்ள சீன வங்கியின் கிளையில், ஆகஸ்ட் 20ம் நாளின் முற்பாதியில், நூற்றுக்கு கூடுதலானோர் வைப்பு அலுவலைச் செய்துள்ளனர்.

வைப்பு அலுவலைச் செய்த மக்களில் பெரும்பாலோர், முதியோர்களாவர். முதலீட்டு இடர்கள் பற்றிய கவலையால், அவர்கள் வங்கியில் பணச்சேமிக்கப்படுவதை விரும்பினர். ஆனால், இளைஞர்கள் எமது செய்தியாளரிடம் பேசுகையில், சீனாவின் பணச்சேமிப்பின் வட்டி விகிதம், மொத்தத்தில் குறைவாகவே இருக்கிறது. 0.27 விழுக்காட்டை அதிகரித்த போதிலும், முதலீட்டுத் தொகையை வங்கியில் சேமிப்பாக மாற்றுவதற்கு இது கவர்ச்சியானது அல்ல என்று தெரிவித்தனர்.

தவிர, சீனாவில் வணிக வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரித்துவரும் பின்னணியில், கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்படுவதால், முதலீட்டைக் கட்டுப்படுத்துவதோடு, வீடு மற்றும் நில உடைமைத்துறையில் நுகர்வுக் கடனின் அதிகரிப்பு நோக்கி சமூகத்தின் கவனம் திரும்பியது. கடந்த 28ம் நாள், வட்டி விகிதத்தை அதிகரித்த போது, தனியார் வீடு வாங்குவதற்கான கடனுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க, மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. மக்கள், முதல் வீட்டை வாங்குவதற்கு சலுகையை அனுபவிக்கலாம். இது குறித்து, சியா பின் கூறியதாவது:

எளிதாக கூறின், கொள்கை முடிவு செய்பவர்கள் மக்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு, பொது மக்களுக்கான பாதிப்பைக் குறைக்க பாடுபடுகிறார்கள் என்றார் அவர்.

மத்திய வங்கியின் கொள்கை குறித்து, பல்வேறு வணிக வங்கிகள் வேகமாக செயல்படத் துவங்கின. சீன தொழில் மற்றும் வணிக வங்கி, சீன வங்கி உள்ளிட்ட வங்கிகள், கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பதோடு, முதலாவது வீட்டை வாங்குபவர்களுக்கு, சலுகை வட்டி விகிதத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளன.

கடனுக்கான வட்டி விகிதத்தின் சரிப்படுத்தல் குறித்து, பொது மக்களிடையே வேறுப்பட்ட கருத்துக்கள் உள்ளன. செய்தி ஊடகத்தில் வேலை செய்த லீ ரை பேசுகையில், கடனின் வட்டி விகிதம் அதிகரிப்பால் ஏற்பட்ட சுமை, தாங்கக்கூடிய அளவில் இருக்கிறது என்று கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

பாதிப்பு மிகவும் குறைவு. என்னுடைய வீட்டு கடனுக்கு, திங்கள் தோறும் கட்டும் தவணை அதிகமாக இல்லை. இதனால், வட்டி விகித அதிகரிப்பால் எனக்கு பெருமளவில் பாதிக்கப்பட வில்லை என்றார் அவர்.

அரசுத் தொழில் நிறுவனத்தில் வேலை செய்யும் சு யுன் தீங் பேசுகையில், முன்கூட்டியே கடனைத் திருப்பி தர விரும்பினார்.

மத்திய வங்கியின் நடவடிக்கை, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனா வட்டி விகிதத்தை அதிகரிக்கும் புதிய காலகட்டத்தில் நுழைந்துள்ளது. எதிர்காலத்தில், மத்திய வங்கி, அடிக்கடி சிறிய அளவில் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் கொள்கையைப் பின்பற்றி, நாணயக் கொள்கை மூலம், பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும். இது பற்றி சியா பின் பேசுகையில், எதிர்காலத்தில், வட்டி விகிதத்தை அதிகரிப்பதும், வட்டி விகித அளவும், ஒட்டுமொத்த பொருளாதாரம் செயல்படுவதைப் பொறுத்திருக்கும் என்று தெரிவித்தார்.


1  2