 அயல் வீட்டுக்காரர்களுடனான உறவுக்கு சீனர்கள் எப்போதும் முக்கியத்துவம் தருகின்றனர். பண்டைக்காலம் தொட்டே, "தூரமான இடத்தில் இருக்கும் உறவினரை விட அயல் வீட்டுக்காரர்கள் மேலும் உதவியாக இருக்கிறார்கள்" என்று கூறப்படுகிறது. ஆனால், நவீன நகர வாழ்க்கையின் வேகத்துடன், அயல் வீட்டுக்காரர்கள் படிப்படியாக அன்னியர்களாக மாறி வருகின்றனர். 7 ஆண்டுகளுக்கு முன் சீனாவின் தியன் ஜின் மாநகரிலுள்ள ஒரு குடியிருப்பு பகுதியில், அயல் வீட்டுக்காரர்களுடன் உறவை வளர்க்கும் நோக்கத்துடன், அயல் வீட்டுக்காரர் தினம் முதல்முறையாக கொண்டாடப்பட்டது. தற்போது, இது சீனாவின் 10க்கு அதிகமான நகரங்களில் பரவி, அயல் வீடுகளுக்கிடையில் நெருங்கிய உறவு படிப்படியாக உருவாகியுள்ளது.
அயல் வீட்டுக்காரர் என்ற சொல்லை கேட்டதும், பல சீனர்களின் மனதில் அன்பான உணர்வு ஏற்படும். ஏனென்றால், சீனாவின் பாரம்பரியத்தில் அயல் வீட்டுக்காரர் என்பது, நெருங்கிய உறவை பிரதிபலிக்கிறது.
கடந்த காலத்தில், சீனாவின் நகரவாசிகளில் பெரும்பாலோர் அடுக்கு மாடி வீடுகளில் வசிக்கவில்லை. பத்துக்கும் மேற்பட்ட பல குடும்பங்கள் கூட ஒரே முற்றத்தைக் கூட்டாகப் பயன்படுத்தின. அவற்றில் வாழ்ந்த மக்கள் பலர் ஒரே சமையல் அறையையும் ஒரே கழிப்பறையையும் கூட்டாகப் பயன்படுத்தினர். அருகில் வாழும் அயல் வீட்டுக்காரர்கள் ஒரே குடும்பத்தினர் போல் பழகினர்.
சமூகத்தின் வளர்ச்சியுடன், நகரவாசிகளின் வசிப்பிட நிலையும் மேம்பட்டுள்ளது. பல மாடிக் கட்டிடங்களில் அவர்கள் குடிபெயர்ந்தனர். வாழ்க்கை வசதிகள் மேம்பட்டு வருவதால், சமையல் அறையையும் கழிப்பறையையும் கூட்டாகப் பயன்படுத்தும் நிலையும் குறைந்துள்ளது. சுறுசுறுப்பான வாழ்க்கை, அந்தரங்கம் மற்றும் குடும்பத்தின் மீதான கருத்து ஆகியவற்றினால், அயல் வீட்டுக்காரர்களுடனான தொடர்பு குறைந்து வருகிறது. பெய்ஜிங்கில் வேலை செய்யும் திரு ச்சுங் சாங் ச்சேங் செய்தியாளரிடம் கூறியதாவது—
"வேலைக்குப் பின் உடல் பயிற்சி செய்கின்றேன். இதை தவிர, மனைவியுடன் உரையாடுகின்றேன். அல்லது தொலைகாட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கின்றேன். இணையதளம் தேடுகின்றேன். அயல் வீட்டுக்காரர்களுடன் தொடர்பு கொள்வது மிகக் குறைவு" என்றார் அவர்.
1 2 3
|