• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-06 08:41:32    
சீனாவில் அயல் வீட்டுக்காரர் தினம்

cri

ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும் நடைபெறும் அயல் வீட்டுக்காரர் தினம் ஒரு வாரம் தொடரும். இந்த வாரத்தில், பல்வகை நட்புறவு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். எடுத்துக்காட்டாக, சதுரங்கம் விளையாடுவது, ஆடல் பாடல் போட்டி, இன்னலில் வாடும் அயல் வீட்டுக்காரருக்கு உதவி செய்வது. ஒவ்வொரு ஆண்டிலும் நல்ல அயல் வீடு தேர்ந்தெடுக்கப்படும். அயல் வீட்டுக்காரர் தினம் உருவாக்கப்பட்ட 7 ஆண்டுகளில், தியன்ஜின் மாநகரின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள 60 ஆயிரம் மக்கள் தொகை கொண்டிருக்கும் இந்த குடியிருப்பு பகுதியில், 700க்கு அதிகமான குடும்பங்கள் நல்ல அயல் வீடு என பாராட்டு பெற்றுள்ளன.

அயல் வீட்டுக்காரர் தினத்தினால் அயல் வீடுகளுக்கிடையிலான தூரம் குறைந்துள்ளது. மக்களுக்கிடை உறவும் நெருக்கமாகியுள்ளது. தற்போது, தியன்தா குடியிருப்பு பிரதேசத்தில் தொடங்கிய அயல் வீட்டுக்காரர் தினம், தியன்ஜின் மாநகரின் இதர குடியிருப்பு பிரதேசங்களில் மட்டுமல்ல, சீனாவின் மற்ற நகரங்கலிலும், பரவியுள்ளது.

சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஹாங் சோ நகரில், ஒவ்வொரு ஆண்டின் அக்டோபர் திங்களின் பிற்பகுதியில், அயல் வீட்டுக்காரர் தினம் கொண்டாடப்படுகிறது. அப்போது, மகிழ்ச்சியையும் இணக்கத்தையும் பிரதிபலிக்கும் மஞ்சள் நிற பட்டு ribbon நகரம் முழுவதிலும் காணலாம். கடந்த ஆண்டில் ஹாங்சோ நகரில் நடைபெற்ற அயல் வீட்டுக்காரர் தினத்தில் குடியிருப்பு பிரதேசத்தின் சதுக்கத்தில் நடந்த 100 குடும்ப விருந்து குறிப்பிடத்தக்கது. அந்த விருந்தில் ஒவ்வொரு உணவு வகைக்கும், ஒவ்வொரு குடும்பத்தின் பெயர் சூட்டப்பட்டது.

அயல் வீட்டுக்காரர் தினம் ஒருசில நாட்களில் நடைபெற்ற போதிலும், அதனால் ஏற்பட்ட நட்புறவு குடியிருப்பு மக்களின் அன்றாட வாழ்வில் ஆழ பதிந்திருக்கிறது.


1  2  3