• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-13 20:44:38    
கிராமக் கல்விக்கான சீன அரசின் முயற்சி

cri

கலை......நீங்கள் சொன்னது சரிதான். இந்த முயற்சி தவிர யூநான் மாநிலத்தில் "ஐந்து சிறிய பணி திட்டங்கள்"நடைமுறைப்படுத்தப்படுள்ளன. அதாவது கிராமப்புறப் பள்ளிகளில் பன்றி வளர்ப்பு, காய்கறி பயிரிடுதல், உணவு விடுதி நடத்துவது போன்ற தற்சார்பு வளர்ச்சி முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள் ஓய்வு நேரத்தில் ஆசிரியர்களின் தலைமையில் தொடர்புடைய உழைப்பில் ஈடுபடுகின்றனர். வளம் உருவாக்கப்படும் அதேவேளையில் கல்விச் சூழலும் மேம்படுத்தப்படும். மாணவர்களுக்கு தேவைப்படும் கல்விச் செலவுக்கு ஈடு வழங்கப்படும். மாணவர்கள் குழந்தை காலம் முதலே தொழில் நுட்பதிறனை கற்றுக் கொள்வர். தற்போது யூநான் மாநிலத்தின் 90 விழுக்காட்டு கிராம பள்ளிகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகி்ன்றது.

ராஜா.......இது மட்டுமல்ல கிராம மாணவர்களின் கல்வி இன்னல்களை நீக்குவதற்காக சீன அரசு மேற்கொண்ட கூடுதலான முயற்சி பற்றி அறிந்து கொண்டேன். எடுத்துக்காட்டாக பள்ளியிலிருந்து தொலைதூரத்தில் வாழ்கின்ற மாணவர்களுக்கு கல்வி வசதி வழங்கும் வகையில் "கிராம விடுதிப் பள்ளி என்னும் தங்கிப் படிக்கும் திட்டத்ற்கு" சீன மத்திய அரசு 2004ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் சிறப்பு தொகை ஒதுக்குகின்றது.

கலை......ஆமாம் இதனால் பள்ளியில் பயில்வதற்காக நாள்தோறும் மலை ஏறித் தாண்டி வரவேண்டிய இன்னல்களிலிருந்து மாணவர்கள் தவிர்க்கப்படுகின்றன. அவர்கள் தூய்மையான ஒழுங்கான வசிப்பிடங்களில் வாழ்ந்து கல்வி பெற முடியும்.

ராஜா.... கிராமப்புறத்துக்கும் நகரத்துக்குமிடையிலான கல்வி இடை வெளியைக் குறைக்கும் வகையில் "கிராமப்புறத்திலுள்ள துவக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் நவீன தொலைவுக் கல்வி திட்டத்தை" சீன அரசு நிறைவேற்றியுள்ளது. கணிணி, செயற்கைக் கோள் தொலைகாட்சி இணையம் ஆகியவற்றின் மூலம் தொலைவுக் கல்வி கற்பிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலை.....இந்த முயற்சி மூலம் கிராம குழந்தைகள் நகர குழந்தைகளை போல புகழ் பெற்ற ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். டிஜிட்டல் நுட்பம் மூலம் நடைபெறும் கல்வியும் அவர்களுக்கு வழங்கப்படும்.

1  2