• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-13 20:44:38    
கிராமக் கல்விக்கான சீன அரசின் முயற்சி

cri

ராஜா......தற்போது சீனாவின் பல்வேறு கிராம பள்ளிகளிலும் கணிணி, செயற்கைக் கோள் தொலைகாட்சி ஆகியவற்றிலிருந்து தகவலை பெறுவதுடன் இணைப்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டின் இறுதிக்குள் ஒவ்வொரு கிராமத்தின் துவக்க மற்றும் இடைநிலை பள்ளிகளிலும் செயற்கைக் கோள் தொலைகாட்சி தகவலை பெறும் திறன் நிறைவேறும். ஒவ்வொரு இடைநிலை பள்ளியிலும் குறைந்தது ஒரு கணிணி வகுப்பறை நிறுவப்படும்.

கலை......இருந்தாலும் தற்போது சீன கிராமப்புறத்தில் கல்வி நிலை நகரங்களில் இருப்பதுடன் ஒப்பிட்டு பார்த்தால் இடைவெளி பெரிதாக இருக்கின்றது. இதை மேலும் குறைக்கும் வகையில் சீன அரசு அடுத்த ஐந்தாண்டு வளர்ச்சி திட்டத்தில் கிராம கல்வியை முதலிடத்திலி வைக்க தீர்மானித்துள்ளது.

ராஜா....சீன தலைமை அமைச்சர் வென்சியாபாவு இது பற்றி கோரிக்கை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது

அடுத்த ஐந்தாண்டுகளில் கட்டாய கல்விக்கென அரசின் நிதித் ஒதுக்கீடு 21 ஆயிரத்து 820 கோடி யுவான் அதிகரிக்கப்படும். கிராமப்புறத்தில் கட்டாய கல்வியிலான இடைநிலை மற்றும் துவக்க பள்ளிகளின் பொது கட்டணக் காப்பீட்டு தரத்தை உயர்த்த வேண்டும். வகுப்பறைகளை பழுதுபார்ப்பதற்கான முதலீட்டு முறைமையை நிறுவ வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் சமமான வாய்ப்பில் கட்டாய கல்வி பெறத் துணை புரிய வேண்டும் என்றார் வென்சியாபாவு.

கலை.......யூநான் மாநிலத்தின் சிங்துந் மாவட்டத்தைச் சேர்ந்த லீ ச்சோ ஜு அம்மையார் ஆசிரியராக பணிபுரிகின்றார். தலைமை அமைச்சரின் வாக்குறுதியை கேட்ட பின் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஊரின் எதிர்கால கல்வி லட்சியத்தின் மீது அவர் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார். அவர் கூறியதாவது

தலைமை அமைச்சர் அளித்த வாக்குறுதி உண்மையாக நடைமுறைபடுத்தப்பட்ட பின் கிராமத்தில் கட்டாய கல்வி மேம்படுவது உறுதி. ஐந்து ஆண்டுகளுக்கு பின் மாணவர்கள் விசாலமான வகுப்பறையில் பாடம் கற்கலாம். வகுப்பு நேரத்துக்குப் பிறகு பந்தாட்டத் திடலில் விளையாடலாம். ஆனால் இத்தகைய காலகட்டத்தில் நகர குழந்தைகள் போல் எங்கள் குழந்தைகள் சிறந்த கல்வி சூழ்நிலை பெற முடியாது. இத்தகைய இடைவெளி நிலவுகின்றது என்று கருதுகின்றேன். ஆனால் இந்த இடைவெளி மென்மேலும் குறையும் என்று நான் நம்புகின்றேன் என்றார் அவர்.


1  2