
யி இன குழந்தைகள்
சீனாவில் 56 தேசிய இனங்களில், யி இனம், நீண்டகாலமாக, தனது தனித்தன்மை வாய்ந்த தேசிய இனப் பண்பாட்டைப் பராமரித்து வருகிறது. அதன் பாரம்பரிய விழா, அன்னைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. அண்மையில் எமது செய்தியாளர் யி இனத்தின் ஒரு கிராமத்தில் பணி புரிந்த போது, அங்கு மாபெரும் பாரம்பரிய விழாவான ஒளிப்பந்த விழா கொண்டாடப்பட்டது. வாருங்கள். நாமும் கொண்டாட்டம் காணச் செய்வோம்.
தென் மேற்கு சீனாவின் யுன்னான், Si Chuan, Gui Zhou, Guang Xi முதலிய இடங்களில் வாழும் யி இன மக்கள், தலைமுறை தலைமுறையாக உயர்ந்த மலைகளிலும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் உழைக்கின்றனர். அவர்களுக்கென சொந்தமாக மொழியும் எழுத்துக்களும் உள்ளன. தனித்தன்மை உடைய தேசிய இன இசை-ஆடல்கள் உருவெடுத்துள்ளன. தவிரவும், சித்திரத் தையல், செதுக்கு வேலை, ஓவியம் உள்ளிட்ட பாரம்பரிய நுண்கலைகளிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சீனாவின் பாரம்பரிய கலண்டரின் படி ஜுன் திங்கள் 24ம் நாள் யி இனத்தின் மாபெரும் விழாவான ஒளிப்பந்த விழா கொண்டாடப்படுகிறது. கிராமத்தின் வயல் வெளியில் எங்கும், மக்கள் திரண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி ஆரவாரம் செய்கின்றனர். நல்ல உடல் வலு உடைய ஆண்கள், மற்போர், குதிரை பந்தயம், மாடுகளை அடக்குவது முகலிய போட்டிகளில் ஈடுபடுகின்றனர். அழகிய மங்கையர்கள், வண்ண வண்ண தேசிய இன ஆடைகளை அணிந்து, மனமுருகும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுகின்றனர், ஆடுகின்றனர்.
1 2 3
|