
Gui Zhou மாநிலத்தின் Shui Cheng மாவட்டத்தில் தேசிய இன விவகாரத்துக்குப் பொறுப்பான அதிகாரி Shi Shu De எமது செய்தியாளரிடம் பேசுகையில் யி இனத்தின் ஒளிப்பந்த விழா தலைமுறை தலைமுறையாக கொண்டாடப்பட்டு, மேலும் அதிகமான தேசிய இன தனித்தன்மை மிக்க அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவர் கூறியதாவது:
"வேறு சில இளைஞர்களும் இளம் பெண்களும் மலைகளில் ஏறி நாட்டுப்புறப்பாடல் பாடுகின்றனர். சிலர், மாடு, கோழி, ஆடு முதலிய மிருகங்களுடன் விளையாடுகின்றனர். விழாவுக்கான கொண்டாட்டங்கள், மிகவும் ஏராளமானவை" என்றார்.
ஒளிப்பந்த விழா கொண்டாடப்படும் இடத்தில் Ma Lang Die கிராமத்தின் அனைவரும் ஒளிப்பந்தங்களுடன் வயல்களைச் சுற்றிச்சென்று, அமோக அறுவடைக்கு வழிபாடு செய்கின்றனர். பின்னர், அனைவரும் சமநிலத்துக்கு வந்து ஒளிப்பந்தங்களை ஒரு கோபுரமாக குவித்து, வட்டமாக சுற்றுச்சுற்று ஆடிப்பாடுகின்றனர். ஒரே ஆரவாரம் தாண்டவமாடுகன்றது. இதற்குப் பின், சில இளைஞர்கள் இளம் பெண்களுடன் மரங்களிடையே நிலா ஒளியில் நாட்டுப்புறப்பாடலைப்பாடி, காதலைத் தெரிவிக்கின்றனர். அருமையான வாழ்க்கைக்கு எதிர்பார்ப்பைத் தெரிவிக்கின்றனர்.

பலவண்ண தேசிய இன ஆடைகள் காரணமாக, விழா முழுவதும், பெரிய ரக யி இன ஆடை பொருள்காட்சியாக மாறியுள்ளது. இதில், ஆரவாரமான, மகிழ்ச்சிகரமான சூழ்நிலை தாண்டவமாடுகின்றது. அப்பகுதியின் தேசிய இன விவகாரத்துக்குப் பொறுப்பான சசூதே பேசுகையில், முன்பு, உற்பத்தி மற்றும் வாழ்க்கை வசதிகள் மோசமாக இருந்ததால், யி இனம் ஒளிப்பந்த விழாவை கொண்டாடும் முறை, இப்போது இருப்பதை விட, எளிமையாக இருந்தது. இப்போது, கடந்த சில ஆண்டு, பொருளாதார நிலைமை மேம்பட்ட பின்னர் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
"முன்பு ஒளிப்பந்த விழாவில், கொண்டாட்ட நடவடிக்கைகள் மிகவும் குறைவு. இப்போது அனைவரும் வளமான வாழ்க்கை நடத்துகின்றனர். சிறுபான்மை தேசிய இனத்தின் இப்பாரம்பரிய விழா படிப்படியாக முழுமையாகப்பட்டு வருகின்றது" என்றார்.
இன்று ஒளிப்பந்த விழா, யி இன மக்களின் வாழ்க்கையை வளமாக்கியுள்ளது. மக்கள், இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி, தத்தமது கலை திறனை அல்லது பல்வகை நுட்பங்களைக் காண்பிக்கலாம். அதே வேளையில், இளைஞர்கள் உணர்வுகளைப் பரிமாறுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இது மாறியுள்ளது.
யி இனத்தின் நாட்டுப்புற விளையாட்டுக்கள், பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள் படைத்த மாபெரும் விழாவாக படிப்படியாக வளர்ந்து வரும் அதே வேளையில், ஒளிப்பந்த விழா மேன்மேலும் புகழ் பெற்று வருகின்றது. அந்நிய பயணிகள் பலரை இவ்விழா ஈர்த்துள்ளது. 1 2 3
|