• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-29 11:20:47    
சீன இளைஞர்களுக்கிடையில் பரவி வரும் 8 நிமிடச் சந்திப்பு

cri

சீனப் பொருளாதார வளர்ச்சியுடன், நகர அளவு நாளுக்கு நாள் பெரியதாகி வருகிறது. நகரங்களில் வாழும் இளைஞர்கள் படிப்படியாக இதற்கு ஏற்ற அதே வேளை, சிறியதாக உள்ள தங்களது வாழ்க்கை சூழல் பற்றி ஏக்கமும் பெருமூச்சும் அடைகின்றனர். நாள்தோறும் வேலை செய்வதில் மும்முரமாக இருப்பதால், அவர்களுக்கு வாழ்க்கையின் இதர துறைகளில் கவனம் செலுத்துவதற்கு நேரம் இல்லை. காதல் கூட அவர்களுக்கு ஆடம்பர ஒன்றாக மாறியுள்ளது. இதனால், மேலை நாடுகளிலிருந்து சீனாவுக்கு வந்த 8 நிமிடச் சந்திப்பு, நகரங்களிலுள்ள குறிப்பிட்ட இளைஞர்களுக்கிடையில் பரவி வருகிறது.

கோடைக்காலத்தில் ஓரிரவு, பெய்ஜிங் மாநகரில் இன்னும் வெப்பமாக இருந்தது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்த மக்கள் வெள்ளம் போல் நகரின் பல்வேறு முனைகளுக்குச் சென்றனர். சீனாவில் புகழ்பெற்ற Zhong Guan Cun பிரதேசத்துக்கு அருகிலுள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில் 8 நிமிடச் சந்திப்பு நடைபெற்றது.

"எதிர் பக்கத்திலுள்ள சார் சிறந்ததாக இருப்பதை உணர்ந்து கொண்டால், அவருடன் தொடர்பு கொள்ளும் முறையை எழுதுங்கள். உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிமிடத்தையும் பற்றிக் கொள்ளுங்கள். சரி, இப்போது முதல் சுற்று 8 நிமிடச் சந்திப்பு துவங்குகிறது. உங்களுக்கு வியப்பு தருவது நமது ஆசை" என்று ஒருவர் கூறினார்.

சாங் ஜிங் அம்மையார், பெய்ஜிங் HUAN LE YUAN என்ற நண்பர் மன்றத்தின் பொறுப்பாளர். இந்த 8 நிமிடச் சந்திப்பு அவரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பொதுவாக கூறின், இந்தச் சந்திப்புக்கு குறிப்பிட்ட ஏற்பாட்டு முறை தேவைப்படுகிறது. சந்திப்பு நடைபெறும் இடத்தில் சிறு மேசைகள் சில உள்ளன. ஒவ்வொரு மேசையின் இரு பக்கங்களிலும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் அமர்கின்றனர். சந்திப்பு துவங்கிய பின், அவர்கள் இருவரும் 8 நிமிடம் பேசுகின்றனர். 8 நிமிடம் ஆனதும், பெண்கள் தங்களது இருக்கையிலேயே அமர்ந்திருக்க, ஆண்கள் தங்களது வலது பக்கத்திலுள்ள அடுத்த மேசையில் அமர்ந்து, அங்கே அமர்ந்த பெண்ணுடன் 8 நிமிடம் பேசுகிறார். இவ்வாறு, ஒவ்வொருவரும் எதிர் பாலினத்தைச் சேர்ந்த அனைவருடனும் பேசி விட்ட பின்னர் இந்த நிகழ்ச்சி நிறைவு பெறும். 8 நிமிடச் சந்திப்பில் கலந்து கொண்டோர் மிகக் குறைந்த நேரத்தில் எதிர் பாலினத்தைச் சேர்ந்த மிக அதிகமான நபர்களை நண்பர்களாக்க முடியும். செய்தியாளரிடம் சாங் ஜிங் கூறியதாவது—

"எமது மன்றத்தில் உறுப்பினர் அதிகம். ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு இருக்குமா இல்லையா என்பது, karma/தலைவிதி தான். கெட்டவர் என்று யாரும் இல்லை. சரியற்ற karma/தலைவிதி மட்டுமே இருக்கிறது. நாம் அனைவரும் இந்த karma/தலைவிதியை எதிர்பார்க்கின்றோம்" என்றார் அவர்.

2003ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட HUAN LE YUAN என்ற இந்த மன்றம், தற்போது சுமார் 30 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பெய்ஜிங்கில் வேலை செய்யும் உயர் நிலை பணியாளர்களாவர். ஒவ்வொரு இரவிலும் 40க்கும் அதிகமானோர் இந்த மன்றத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் தங்களுக்குரிய காதலை காண்பதை எதிர்பார்க்கின்றனர்.

உறுப்பினர்களுக்கு மேலும் அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், குடும்ப உணர்வை உருவாக்குவதற்கு இந்த மன்றம் பாடுபடுகிறது. மன்றத்தின் அறையில் ஒளி மென்மையாக இருக்கிறது. காற்றில் லேசான coffee வாசனையும், அறையின் பல்வேறு பகுதிகளில் அருமையான இசையும் நிறைந்துள்ளன. 30 சதுர மீட்டர் பரப்பளவுடைய இடத்தில் 8 சிறு மேசைகள் உள்ளன. ஒவ்வொரு மேசையின் மேல் பழைய பாணி விளக்கு இருக்கிறது. இந்த மேசைகள் சிறு அலமாரிகளால் 2 பகுதிகளில் பிரிக்கப்படுகின்றன.

தகவல் தொழில் நுட்ப துறையில் ஈடுபட்ட சாங் சியௌ அம்மையாரும் திரு லி கான்னும் 8 நிமிடச் சந்திப்பு ஒன்றில் குறுகிய நேர பேச்சு மூலம் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டனர். தங்களது உணர்வு பற்றி செய்தியாளரிடம் அவர்கள் கூறினர். சாங் சியௌ அம்மையார் கூறியதாவது—

"அவர் நல்லவர். நேர்மையானவர். வேலை, ஈடுபடும் தொழில், இந்த இடத்துக்கு வர காணரம் என்ன ஆகியவை பற்றி நாங்கள் முக்கியமாக பேசினோம். தனிமை காரணமாக காதல் உணர்வை நாட விரும்புகின்றோம்" என்றார் அவர்.

1  2