• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-29 11:20:47    
சீன இளைஞர்களுக்கிடையில் பரவி வரும் 8 நிமிடச் சந்திப்பு

cri

சாங் சியௌ அம்மையாரின் காதலுணர்வு நிறைந்த எண்ணத்துக்குப் பதிலாக, திரு லி கான்னின் எண்ணம் பகுத்தறிவுடன் இருக்கிறது. அவர் கூறியதாவது—

"இந்த சந்திப்பு ஏற்படுத்திய வாய்ப்பு அவ்வளவு அதிகம் இல்லை. ஆனால், ஒருவரது சமூக வட்டத்தை இது விரிவாக்க முடியும். உண்மையில் வாய்ப்பை பற்றிக் கொள்ள முடியுமா இல்லையா என்பது, வேறு" என்றார் அவர்.

HUAN LE YUAN மன்றம் நிறுவப்பட்டது முதல் இன்று வரை, நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சிலர் வாய்ப்புகளைப் பற்றிக் கொண்டு, காதல் ஏற்படுத்திய மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர். இம்மன்றத்தின் பொறுப்பாளர் சாங் ஜிங் ஒரு உதாரணம் கூறினார்.

"வழக்கறிஞர் ஒருவர் எமது மன்றத்துக்கு வந்திருந்தார். அவர் நல்லவர். அப்போது, 3 மாதங்களுக்கு முன் பெய்ஜிங் வந்தடைந்த இளம் பெண் ஒருவர், கூடுதலான நண்பர்களுடன் பழக, எமது மன்றுத்துக்கு வந்தார். அவர்கள் இருவரும் சந்தித்ததும், மகிழ்ச்சியுடன் பேசினர். இவ்வாண்டு இறுதியில் அவர்கள் திருமணம் செய்வார்களாம்" என்றார் அவர்.

8 நிமிடச் சந்திப்பு என்ற நண்பர்களை அறிந்து கொள்ளும் இந்தப் பதிய வழிமுறை, சீனாவில் பரவி வருவது, நவீன சமூகத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை வேகத்துடன் தொடர்புடையது என்று சீன சமூக அறிவியல் கழகத்தின் குடும்ப மற்றும் திருமண ஆய்வகத்தின் துணைத் தலைவர் வாங் ச்சென் யூ கருத்துத் தெரிவித்தார்.

இந்த நிபுணர் சொல்வதைப் போன்று, வேகமான வாழ்க்கையினால், நண்பர்களை அறிந்து கொள்ளும் வேகமான முறைகள் நாளுக்கு நாள் பரவி வருகின்றன. 8 நிமிடச் சந்திப்பு தவிர, இணைய தளத்தில் திருமண நோக்கிற்காக நண்பர்களை அறிந்து கொள்ளும் முறையும், தொலைக்காட்சி மூலம் தன்னை அறிமுகப்படுத்தி நண்பர்களை அறிந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் வயதான இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

நண்பர்களை அறிந்து கொள்ளும் பல்வகையான முறைகள் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கிய போதிலும், அவை அவ்வளவு வேகத்தில் காதலாக மாற முடியாது. உண்மையான காதலுக்கு, ஆழ்ந்த புரிந்துணர்வும், முழு மனதுடன் கூடிய பராமரிப்பும் தேவைப்படுகின்றன.


1  2