• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-27 14:14:07    
மீத்தேன் வாயு பயன்பாட்டு நுட்பம்

cri

கிளிடஸ்.....மீத்தேன் வாயு குப்பைகள் மட்கிப்போக அதிலிருந்து விளையும் மிக உயர் மதிப்புள்ள தூய்மையான எரிபொருளாகம். அப்படிதானே.

கலை.......ஆமாம். குறிப்பிட்ட அளவில் இது பெட்ரோல், இயற்கை வாயு, நிலக்கரி போன்ற எரி பொருட்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் எரிபொருளாகும்.

கிளிடஸ்.....அப்படி என்றால் கிராமப்புறங்களில் மனிதரின் மலம், கால்நடைகளின் கழிவு, அன்றாட வாழ்க்கையில் நாம் வீசியெறியும் குப்பைகள் ஆகியவற்றை மீத்தேன் வாயு உருவாக்குவதற்கான மூல பொருட்களாக பயன்படுத்தலாமா?

கலை........உங்களுடைய யோசனை இன்றைய நிகழ்ச்சியில் விவரிக்க போகின்ற கருப்பொருளுக்கு ஏற்றது. நீங்கள் பாருங்கள் சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள குவாந்சி சுவான் இனத்த் தன்னாட்சி பிரதேசத்தில் நீங்கள் குறிப்பிட்ட பொருட்களை பயன்படுத்தி மீத்தேன் வாயு உருவாக்கும் தொழில் நுட்பத்தை கிராமவாசிகளிடையில் உள்ளூர் அரசு பிரச்சாரம் செய்கின்றது.

கிளிடஸ்.....அப்படியிருந்தால் நாம் அவர்களுடைய அனுபவத்தை பார்க்க போகலாமே.

கலை.......குவாந்சி சுவான் இனத் தன்னாட்சி பிரதேசத்தில் மாசற்ற மீத்தேன் வாயு பயன்படுத்தப்பட்ட பின் அங்குள்ள ஆகாயம் நீலமடைந்தது. மலை மேலும் பச்சைப்பச்சேல் எனத் தோன்றுகிறது.

கிளிடஸ்.....மக்கள் வாழ்க்கையில் எதாவது மாற்றம் காணப்பட்டதா?

கலை.....கண்டிப்பாக. தன்னாட்சி பிரதேசத்தின் வறுமை ஒழிப்பு அலுவலகத்தின் தலைவர் ஹு த்தெ சாய் மீத்தேன் வாயு பயன்பாடு விவசாயிகளை வறுமையிலிருந்து விடுவித்த அனுபவத்தை விவரித்தார். அவர் கூறியதாவது.

கிளிடஸ்.....மீத்தேன் வாயு பயன்பாட்டில் சில நன்மை உண்டு. முதலில் விவசாயிகளின் வாழ்க்கையில் எரிபொருள் பற்றாக்குறைத் தீர்ந்தது. வன வளர்ப்பு சீர்குலைவு குறைந்துவிட்டது. சீரான இயற்கை சுற்றுச்சூழல் மீட்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, மீத்தேன் வாயு சுகாதாரமானது. மாடு ஆடு ஆகியவற்றின் மலம் பயன்படுத்தப்பட்டன. மீத்தேன் வாயு விளையும் கழிவு பயிர்களை பயிரிடுவதற்கு தரமான மலமாக பயன்படுத்தப்படுகிறது. தவிரவும் சில உழைப்பாளர்கள் குறிப்பாக மகளிர் கடும் வீட்டு வேலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கலை.......தலைவர் ஹு த்தெ சாய் விவரித்த உண்மையை பார்த்தோம். விவசாயிகளின் வாழ்க்கைக்கு மீத்தேன் வாயு எத்தகைய நன்மை தந்துள்ளது. அதை நாம் பார்க்க போகலாமா?

கிளிடஸ்.....சீக்கிரமாக போவோம்.

கலை....... லான் குவா லின் என்னும் விவசாயி தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் நானின் புறநகரில் வாழ்கின்றார். குடும்பத்தில் நான்ரு பேர் வாழ்கின்றனர். 2 ஹெக்டர் விளை நிலத்தில் அவர்கள் வேளாண்மையில் ஈடுபடுகின்றனர். அன்றாட வாழ்க்கை செலவு தவிர, சிக்கனப்படுத்திய தொகையைக் கொண்டு அவர் இரண்டு மாடிகளுடைய கட்டிடத்தை கட்டினார்.

கிளிடஸ்.....அருமையான அந்த வீட்டில் மீத்தேன் வாயு பயன்படுத்தப்பட்டதா?

கலை.......ஆமாம். மீத்தேன் வாயு தான் பயன்படுத்தப்பட்டது. அழகான அவரது வீடு பகையால் மாசுப்படாமல் தவிர்க்கப்பட்டது. இதற்கு மீத்தேன் வாயு முக்கிய காரணமாகும்.

1  2