
கிளிடஸ்.....இது பற்றி எதாவது கதை இருக்கின்றதா?
கலை.....ஆமாம். வீட்டுகாரரின் துணைவியார் இது பற்றி கூறினார்.
நான் இப்போது மீத்தேன் வாயு பயன்படுத்தி சமைப்பதில் இன்னல் எதுவும் இல்லை. முன்பு விறகுகளை பெற நான் மலையேறி மரத் துண்டுகளை வெட்ட வேண்டும். இப்போது இந்த வேலை என் வாழ்க்கையில் காணாமல் போயிற்று.
கிளிடஸ்.....அவருடைய கூற்றை கேட்ட பின் அங்கே ஏற்பட்ட மாற்றங்கள் என் கண் முன்னே காட்சியாய தோன்றுகிறன.
கலை......ஆமாம். குங் சன் யோ இனத் தன்னாட்சி மாவட்டம் குவாந்சி சுவான் இனத் தன்னாட்சி பிரதேசத்தின் குவெய் லின் நகரின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. அங்கே மக்கள் தொகை 3 லட்சம் மட்டுமே.
கிளிடஸ்.....மீத்தேன் வாயு பயன்படுத்தப்படும் சூழ்நிலை அங்கே எப்படி?
கலை.......மீத்தேன் வாயு பயன்பாடு அங்கே ஒவ்வொரு விவசாயியின் குடும்பத்திற்கும் பரவியது. கிராமத்தில் பெரிய மீத்தேன் வாயு குளம் நிறுவப்பட்டது. மீத்தேன் வாயு குழாய் விவசாயிகளின் குடும்பங்களை இணைக்கின்றது.
கிளிடஸ்.....கேட்பதற்கு இந்தத் திட்டம் அருமையான திட்டமாக தோன்றுகிறது.. மீத்தேன் வாயு வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்ட பின் பல உழைப்பாற்றல் மிச்சமானது. விளை நிலங்களும் மேலும் நன்றாக பயன்படுத்தப்படும்.
கலை......ஆமாம். கிராமவாசி யுன் வென் சீ இது பற்றி அறிமுகபடுத்தினார். அவர் கூறியதாவது.
கிளிடஸ்....... மீத்தேன் வாயு விலை மலிவு. ஒரு பொட்டனுக்கு 92 யுவான். மாதத்திக்கு ஒரு பொட்டன் கூட பயன்படுத்த வில்லை. ஆகவே மாதத்திற்கு நான் 60 யுவான் மிச்சமாக பெறுகின்றேன்.
கலை.........மீத்தேன் வாயு வளர்ச்சியும் பயன்பாடும் குவாந்சியில் பல உற்சாகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. தன்னாட்சி பிரதேசத்தின் குவெய் லின் வன ஆணையத்தின் துணைத் தலைவர் சியான் லோ ஹை இது பற்றி கூறினார்.
கிளிடஸ்..... கிராமப்புறத்தில் கட்டமைப்பிலும் எரி பொருள் பயன்படுத்தும் வழிமுறையிலும் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீத்தேன் வாயு பற்றிய பயன்பாடு, அதற்கான பிரச்சாரம் ஆகியவற்றின் மூலம் மிகப் பல விவசாயிகள் கடும் இன்னலுடன் விறகுகளை சேகரிப்பதிலிருந்து விடுதலை பெற்றுள்ளனர். குவெய் லின் வன வளர்ப்பு நிலப்பரப்பு 1980ம் ஆண்டில் இருந்த 37.07 விழுக்காட்டிலிருந்து தற்போது 66.46 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
கலை.......குவாந்சி சுவான் இனத் தன்னாட்சி பிரதேசம் மீத்தேன் வாயு பயன்பாட்டில் மகிழ்ச்சிகரமான அனுபவம் பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு நன்மை தந்தது மட்டுமல்ல புதிய ரக கிராமத்தை கட்டமைப்பதற்கும் இது புதிய பாதையை திறந்துள்ளது.
கிளிடஸ்........பல அன்னிய நண்பர்கள் சோதனை செய்ய அங்கே சென்று வருகின்றனர்.
கலை......ஆமாம். வறுமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி லீ பான் ச்சுன் இது பற்றி கூறினார்.
கிளிடஸ்........நான் அறிந்தவரை ஆப்பிரிக்க நாடுகளிலான காலநிலை எங்கள் குவாந்சி போல இருக்கின்றது. மீத்தேன் வாயு குளத்தை உருவாக்குவது அங்குள்ள காலநிலைக்கு ஏற்றது. ஆப்பிரிக்க நண்பர்கள் நாங்கள் பய.ன்படுத்திய மீத்தேன் வாயுலில் மிகவும் அக்கறை செலுத்துகின்றனர்.
கலை......ஆகவே சீனா கிராமப்புறத்தின் வளர்ச்சியில் மீத்தேன் வாயுவை பரவலாக்க வேண்டும். அதில் பெற்ற அனுபவத்தை கொண்டு ஆப்பிரிக்க நண்பர்களுக்கு உதவலாம். 1 2
|