முதல் முறை யுங் கு வாங் சந்திக்கும் போது, அவர் முழுமூச்சுடன் கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்திருக்க, அவரது கட்டுப்பாட்டில் "சீன ப் மி இனப் பண்பாட்டு இணைய தளம்" என்ற பக்கம், அவரது இணைய திரையில் தென்படுகின்றது. ப் மி இனப் பண்பாட்டினை அறிமுகப்படுத்தும் இணைய தளம், இதுவாகும். யுங் கு வாங் பற்றி தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.

யுங் கு வாங், அவ்வளவு உயரமானவர் அல்லை. பருத்த உடல், வயது 60க்கு மேல்.

அவர், ப் மி இனத்தவர். இவ்வினத்தின் மக்கள் தொகை குறைவு. அதன் வளர்ச்சியும் மந்தமாகவுள்ளது. இருப்பினும், அவரின் வார்த்தையிலிருந்து அவரது தேசிய இன உணர்வு அவ்வப்போது வெளிபடுகிறது. வெகு காலத்துக்கு முன்பிருந்தே, ப் மி இனத்தின் தோற்றம் பற்றி அவர் பேரார்வம் கொண்டுள்ளார். அப்போது, அவர், தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்து லேங் பின் மாவட்டத்திலுள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார்.
"துவக்கத்தில், முக்கியமாக, ப் மி இனம் எங்கிருந்து வந்தது? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? என்பதில் அக்கறை காட்டினோம். இதர தேசிய இனங்களுக்கும் இத்தகைய மனப்பான்மையும் இருக்கலாம்" என்று அவர் கூறினார்.
1 2
|