• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-12 10:17:43    
ப் மி இன ஆசிரியரின் இணைய தளம்

cri

பின்னர், மாவட்ட அரசின் பொறுப்பை ஏற்று, ப் மி இனம் பற்றிய நூல் ஒன்றை அவர் இயற்றினார். எனவே, இதற்காக ப் மி இனத்தவர்கள் கூடிவாழும் பல இடங்களுக்குச் சென்று, தரவுகளைத் திரட்டி, மேலதிகமான ப் மி மக்களுடன் தொடர்பு கொண்டார். இவ்வனுபவங்களினால், யுங் கு வாங் தமது இனத்தை மேலும் புரிந்து கொண்டுள்ளார். இந்த அனுபவங்களை, மேலதிகமான ப் மி உடன்பிறப்புகளுக்குப் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. இதற்காக, தாம் அறிந்த அனைத்தையும் இந்த நூலில் எழுதினார். இருப்பினும், நூல் மூல பிரச்சார பங்கு எல்லைக்குட்பட்டதென கருதி, மேலும் விரைவான, மேலும் பரவலான பிரச்சார வழிமுறையைக் கண்டறிய வேண்டும் என்று அவர் விரும்பினார்.

2002ம் ஆண்டில், அவர் ஆசிரியர் பணியிலிருந்து விலகினார். தமது நண்பர்களின் செல்வாக்கில், கணிணியின் பயன்பாட்டை பழகி, இணைய தளத்திலிருந்து அவர் சில தகவல்களைத் தேடிப்பார்ப்பது வழக்கம். இணைய தளத்தின் மூலம் ப் மி இனத்தை பிரச்சாரம் செய்தால் என்ன என்று ஒரு நாள் அவர் நினைத்தார்.

"இணைய தளத்தில் பலவற்றை காணலாம். எடுத்துக்காட்டாக புல் என்றால் புல் பற்றிய இணைய தளம் உண்டு. ஆட்டு ரோமம் பற்றிய இணைய தளமும் உள்ளது. தேசிய இனம் இதே போன்றது. எங்கள் ப் மி இனத்துக்கு இணைய தளமில்லை. எனது கருத்துக்கு இணைய தளத்தை அமைப்பதென்ற எண்ணம் ஒத்துப்போனது" என்றார், அவர்.

யுங் கு வாங் தமது கருத்தை குடும்பத்தினர்களிடம் சொன்னார். மகள் யுங் சு லேங்கின் பெரும் ஆதரவை பெற்றார். தமது தந்தை, ப் மி இனத்தைப் பிரச்சாரம் செய்யப்பாடுபடுவதைக் கேட்டதும், சிறிதும் தயக்கமின்றி, ஆயிரத்துக்கு மேலான யுவானை அவர் இணையத் தளத்தை அமைக்க விரும்பும் தந்தைக்கு கொடுத்தார்.


1 2