இந்த பண்பாட்டு நிலைமையில், பல பெண்மணிகள், பாரம்பரிய வேளாண் உற்பத்தி மற்றும் தயாரிப்பு துறை, சேவை துறை ஆகியவற்றின் நடுத்தர நிலையான தொழில் நுட்பத்துடன் கூடிய வாரியங்களில் பணி புரிகின்றனர். வேலையற்ற பெண்மணி எண்ணிக்கை அதிகமாக இருந்தால், மீண்டு வேலையில் ஈடுபடும் இன்னல் அதிகம். தவிரவும், குறைவான அறிவால், அவர்களில் பெரும்பாலோர், சமூக நிர்வாகம் மற்றும் தீர்மானங்களில் கலந்துக் கொள்ளும் ஆக்கபூர்வமான உணர்வு, பற்றாக்குறைவாக இருக்கும்.தமது சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்க அவர்களால் முடியாது. அறிவியல் அறிவு பற்றாக்குறையால், மகளிரின் மன மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சில பெண்மணிகள், அறிவியலற்ற வழிமுறை மூலம், எடைக்குறைப்பு சிகையலங்காரம் ஆகியவற்றில் ஈடுபட்டதினால், உடல் நலத்துக்கு பெரிய தீங்கை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இவ்வாறு மகளிரின் அறிவியல் அறிவை உயர்த்துவது என்பது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக மாறியுள்ளது.
அறிவியல் அறிவு திட்டம் நடைமுறைப்படுத்தும் போக்கில், ஆண்களும், பெண்களும், சமனற்ற நிலையில் கல்வியும் பயிற்சியும் பெறும் வாய்ப்பு பற்றிய உண்மையான நிலைமையையும் நகரங்களுக்கு கிராமங்களுக்குமிடையிலான இடை வெளியையும், வட்டாரங்களுக்கிடையிலான இடை வெளியையும், மக்களின் தனிச்சிறப்பையும், முழுமையாக கருத்தில் கொள்ள வேண்டும், மகளிரின் அறிவியல் அறிவை உயர்த்துவதிலுள்ள பல்வேறுத் தடைகளை முழுமூச்சுடன் நீக்கி, மகளிருக்கு அதிகமான வழிமுறைகளும் வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும். குழந்தைகள், விவசாயிகள், நகரத் தொழிலாளர்கள், ஊழியர்கள் மற்றும் அரசாங்க பணியாளர்கள் போன்ற 4 வகையான மக்களின் அறிவியல் அறிவில் மகளிரின் தனிச்சிறப்புக்கும் தேவைக்கும் சிறப்பாகக் கவனம் செலுத்த வேண்டும்.
1 2
|