• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-19 08:42:27    
ப் மி இன பண்பாட்டு வலைப்பின்னல்

cri

"எங்கள் ப் மி இன மக்களில் பலர், கவனம் செலுத்தவில்லை என்பதால், பலவற்றை இழந்து விட்டோம். முன்பு எழுத்து மூலப் பதிவு இல்லை. வரலாறு, வாய்வழி வார்த்தைகள் மூலம் நிலவியுள்ளது. சிலர் மரணமடைந்ததன் காரணமாக, சிலது இல்லாமல் போயிற்று" என்றார், அவர்.

குடும்பத்தினர்கள் மற்றும் ஆர்வமுடையோரின் உதவியுடன், யுங் கு வாங் விரைவில் இணைய தளத்தை அமைக்க முடிந்தது. ப் மி இனப் பண்பாட்டை நன்கு அறிந்த யுங் கு வாங், இந்த இணைய தளத்தை, நிகர பண்பாடு பற்றிய இணைய தளமாக்கினார்.

இணைய தளச் சேவை, யுங் கு வாங்கிற்கு மகிழ்வினைத் தந்தது. இணையம் பற்றிய அறிவை அவர் கற்றுக்கொண்டார். அன்றி, நாட்டில் வாழும் ப் மி இனப் பிரதேசங்களுக்கும் சென்று, தரவுகளையும் படங்களையும் திரட்டினார். "சீன ப் மி பண்பாட்டு இணையத் தளம்". யுங் கு வாங்கின் கவனமான நிர்வாகத்தில் படிப்படியாக பக்குவமடைந்து, ப் மி இனத்தின் பழக்க வழக்கங்கள், விழாக்கள் விடுமுறைகள், ஆடைகள், அலங்காரங்கள் உட்பட, பண்பாட்டை அறிமுகப்படுத்தும் தனிச்சிறப்பான இணைய தளமாகியுள்ளது. அதே வேளையில், மென்மோலும் அதிகமான ப் மி இன இணைய தள நண்பர்களையும் இதர தேசிய இனத்து இணைய தள நண்பர்களையும் ஈர்த்துள்ளது.

இணைய தளம் படிப்படியாக வளர்ந்து வருவதைக் கண்டு யுங் கு வாங் மிகவும் மிகழ்ச்சியடைந்தார். ஆனால், கவலைக்குரிய பிரச்சினை ஏற்பட்டது. இணைய தளத்தைப் பேணிக்காப்பதற்கான கட்டணம் நிலைநிறுத்த முடியாத நிலை தோன்றியது. இத்திடீர் சிக்கல், யுங் கு வாங்கிற்கு துன்பத்தை தந்தது. அவர் மிகவும் கவலை அடைந்தார். இருப்பினும், இணைய தளத்தை மென்மேலும் அதிகமான இணைய தள நண்பர்கள் பாராட்டி வருவதைக் கண்டு, யுங் கு வாங், இணைய தளத்தை தொடர வேண்டும் என்று உறுதிபூண்டார். அவர் கூறியதாவது: "பல இளைஞர்கள் இணைய தளத்தில் தெரிவித்த கருத்துகளில், இது, எங்களின் எழுச்சி ஊர் என்று கூறினர். எனவே, இன்னல் காரணமாக இதை நிறுத்தினால், பலருக்கு வேதனை ஏற்படும். எனவே, நிலைநிறுத்த முடியுமானால், தொடர வேண்டும்" என்றார்.

1 2