இதற்குப் பிந்திய நீண்டகாலத்துக்குள், யுங் கு வாங், நிதியுதவியை நாட மும்முரமாக செயல்பட்டார். அதே வேளையில், தமது 2000 யுவான் ஓய்வூதியத்தின் பாதியான ஆயிரம் யுவானை இணைய தளத்தின் பராமரிப்புக்கு கொடுத்தார். அவரது முயற்சியுடன் இணைய தளம் தொடர்ந்து இயங்குகின்றது.

இது வரை இணைய தளம் நடத்தப்பட்டு, நான்கு ஆண்டுகளாகியுள்ளன. இதற்கிடையில், யுங் கு வாங், நாள் முழுவதிலும் சிரமப்பட்டு வேலை செய்கின்றார். அவர் கண்படல நோய் ஏற்பட்டாலும், மூக்குக்கண்ணாடி அணிந்து இணைய தளத்துக்கு முன் அமர்ந்து பணிபுரிகின்றார். செய்தியாளரிடம் பேசுகையில், இணைய தளத்திலுள்ள உரை அனைத்தும், இணைய தளத்தை நிலைநிறுத்துவதற்கு உந்து விசையாகத் திகழ்கின்றது என்று யுங் கு வாங் கூறினார்.

இணைய தள நண்பர் யுங் இன் வாங் ஒரு ப் மி இன பல்கலைக்கழக மாணவர். யுன்னான் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலுகின்ற அவர் செய்கியாளரிடம் பேசிய போது, ப் மி இனப் பண்பாட்டின் மீதான யுங் கு வாங்கின் பற்று, மதிப்புக்குரியது என்றார். அவர் கூறியதாவது: "ஆசிரியர் யுங், தேசிய இனப் பண்பாட்டு பணியில் முழுமூச்சுடன் ஈடுபடுகின்றார். தற்போதைய தலைமுறையினராகிய நாங்கள், அவருக்கு எங்கள் இதயப்பூர்வமான வியப்பையும் நன்றியையும் தெரிவிக்க வேண்டும்" என்றார், அவர். 1 2
|