• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-26 08:12:25    
மாவ் நங் இனக் குடும்பத்தில் விருந்தினர்

cri

தெற்கு சீனாவின் குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் கூடிவாழும் மாவ் நங் இனத்தின் மக்கள் தொகை, 80 ஆயிரம் மட்டுமே. சீனாவின் குறைவான மக்கள் தொகையுடைய 22 தேசிய இனங்களில் இதுவும் ஒன்றாகும். முன்பு மாவ் நங் இனத்தவர்கள் பெரும்பாலானோர் மலைகளில் வாழ்ந்து வந்ததால், வெளிப்புறத்துடன் தொடர்பு கொள்ளாமல், அவர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலை மிகவும் இன்னலாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில், மாவ் நங் இன மக்கள் மலைகளிலிருந்து வெளியேறி, சமவெளியில் குடியேறி, வெளிப்புறத்துடன் தொடர்பு கொள்ளத் துவங்கினர். மலைகளை விட்டு வெளியேறிய மாவ் நங் இன மக்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலையில் எப்படிப்பட்ட மாற்றம் ஏற்ப்டடுள்ளது என்பதை அறிய, தங்களுடன் மாவ் நங் இன மக்களில் ஒருவரான லு சியாங் பெய் வீட்டிற்குப் போவோம்.

குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரிலிருந்து வாகனம் மூலம் 4 மணி நேர பயணத்திற்கு பின் மாவ் நங் இனத் தன்னாட்சி மாவட்டம் வந்தடைந்தோம். மாவட்ட தலைநகரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள செங் சுவாங் கிராமத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள 2 மாடி உயரமான செங்கல் வீட்டிற்குச் சென்றோம். லு சியாங் பெய் என்பவர், இவ்வீட்டின் உரிமையாளர். இவ்வாண்டு அவருக்கு 50 வயது. செய்தியாளரிடம் பேசுகையில், பத்து ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தினர்கள் அனைவரும் பெரிய மலைப்பிரதேசத்தில் வாழ்ந்ததாகக் கூறினார்.

"இவ்விடத்தில் போக்குவரத்து வசதியில்லை. வெளியே போவதற்கு மலையேற வேண்டும். எங்கள் குடும்பத்தினர்கள் 25 கிலோகிரோம் எடையுடைய பொருட்களைக் கொண்டுச் சந்தைக்கு போக, 5 மணி நேரம் தேவை. விடியற்காலை புறப்பட்டு சென்றால் குறைந்தது, இரவு 11 மணியளவில் வீடு திரும்பலாம். எவ்வளவு கடினம். பாதை இல்லை. எங்கும் கற்கள் தான். மலைகளில் மரங்கள் மட்டுமே. 50-60 வயதடையோர் நடந்து போக முடியவில்லை" என்று லு சியாங் பெய் கூறினார்.

1 2