• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-29 11:30:20    
வேலை வாய்ப்பை அதிகரிக்கப் பாடுபட்டுவரும் சீனா

cri

130 கோடிக்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட சீனா, உலகில் மிக அதிகமான மக்கள் தொகையுடைய நாடு. வேலை வாய்ப்புப் பிரச்சினையைத் தீர்ப்பது கடினமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அதிகரிப்பதில் சீன அரசு மிகவும் கவனம் செலுத்தி, அதை மக்கள் வாழ்க்கைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் முக்கிய அம்சமாகக் கருதிவருகின்றது. தீவிர முயற்சிகளின் பயனாய், சீனாவில் வேலையில்லா விகிதம் தாழ்ந்த நிலையில் இருந்துவருகின்றது.

லீ முகான் என்பவர் பெய்சிங் மொழியியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 4வது ஆண்டு வகுப்பு மாணவி. பட்டம் பெறுவதற்கு இன்னும் சில திங்கள் இருந்த போதிலும், வேலை பெறுவதில் அவர் மும்முரமாக இருக்கின்றார். அண்மையில், சீனாவின் பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வேலை வாய்ப்புக்கான இணைய தளம் மூலம் விண்ணப்பம் ஒன்றை அனுப்பினார். ஒரு வாரத்திற்குப் பின்னர் அவருக்குப் பதில் கிடைத்தது. இது குறித்து அவர் கூறியதாவது,


முன்பு, அரசின் வேறுபட்ட வாரியங்களின் இணைய தளம் மூலம் எங்களுக்கு விருப்பமான தொழில் நிறுவனங்களைக் கண்டறிந்தோம். இதற்கு அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது, வேலை வாய்ப்புக்கான இணைய தளத்தைச் சொடுக்கினால்,போதும். மிகவும் வசதி என்றார் அவர்.
சீனாவின் பல்கலைக்கழகப் பட்டத்தாரிகளின் வேலை வாய்ப்புக்கான இணைய தளம், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், கல்வி அமைச்சகம், உழைப்பு மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகம் உள்ளிட்ட 5 வாரியங்களால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளில் சீனாவின் பல்கலைக்கழகங்கள் மாணவர்களைச் சேர்க்கும் அளவை அதிகரித்துள்ளன. இதன் விளைவாக மேலும் அதிகமான இளைஞர்கள் உயர் நிலைக் கல்வி நிலையங்களில் சேரும் வாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால், பல்கலைக்கழகப் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு பெறுவது கடினமாக உள்ளது. இவ்வாண்டு சீனாவில் 49 லட்சம் பல்கலைக்கழக மாணவர்கள் பட்டம் பெறுவார்கள். இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட சுமார் 7 லட்சம் அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டும்.
பல்கலைக்கழகப்பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பெறுவதற்குத் துணை புரிய சீனா பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று சீன உழைப்பு மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சின் அதிகாரி yin jian kun அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது,


எடுத்துக்காட்டாக, பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பை முடிப்பதற்கு முன், வேலை சிபாரிசு செய்வதில் பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கு உதவியளித்துள்ளன. வேலை வாய்ப்புக்கான பொதுச் சேவை நிறுவனம், பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்குச் சேவை புரியும் யன்னலைத் திறந்துவைத்துச் சிறப்புச் சேவை வழங்கியுள்ளது. தொடர்புடைய வாரியங்கள், மாணவர்களுக்கு ஏற்ற பணித் தகவலை வழங்கும் சிறப்புக் கூட்டம் நடத்தி, வேலை வாய்ப்பு பெறுவதில் அவர்களுக்கு உதவியளித்துள்ளன. பணி அனுபவம் இல்லை என்பது பல்கலைக்கழகப் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு பெறுவது கடினமாக இருப்பதற்குக் காரணம் ஆகும் என்றார் அவர்.
கிராமத்திலிருந்து நகருக்குச் சென்ற விவசாயிகளுக்கு உரிய வேலை வாய்ப்பு கிடைப்பதைத் தூண்ட சீனாவின் பல்வேறு நகரங்களில் குறிப்பிட்ட நேரத்தில் விவசாயிகளுக்கு இலவச வேலை வாய்ப்புத் தகவலை வழங்கும் முறைமை நிறுவப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களுக்கென பணி அமர்த்தல் கூட்டங்கள் அடிக்கடி நடைபெற்றன.

1 2