• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-29 11:30:20    
வேலை வாய்ப்பை அதிகரிக்கப் பாடுபட்டுவரும் சீனா

cri

கிராமத்திலிருந்து நகருக்குச் சென்ற விவசாயிகளின் தொழில் நுட்பத்தை மேம்படுத்த, சீன அரசு உரிய பணித் திட்டத்தையும் வகுத்துள்ளது என்று சீன உழைப்பு மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சின் அதிகாரி yin jian kun கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

நகரங்களில் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான விவசாயிகளின் தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் திட்டமொன்றைக் கடந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தத் துவக்கினோம். சீனாவின் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது அதாவது, 2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை, 4 கோடி கிராம உழைப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். ஆண்டுதோறும் 80 லட்சம் பேர் பயிற்சி பெறுவார்கள் என்றார் அவர்.
இவ்வாண்டு 19 வயதாகும் ma dong என்பவர், மத்தியச் சீனாவின் ஹொனான் மாநிலத்து கிராமவாசி. கடந்த ஆண்டின் பிற்பாதியில் அவர் கிழக்குச் சீனாவின் சூசோ நகரில் வேலை செய்யத் துவங்கினார். செய்தித்தொடர்புச் சாதனத் தயாரிப்புத் தொழில் நிறுவனமொன்றில் அச்சடிப்புத் தொழிலில் ஈடுபட அவர் அனுமதி பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் இலவசப் பயிற்சி பெற்றுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,

இங்கு வந்த பின்னர் முதலில் 5 நாள் தத்துவப் பாடம் நடைபெற்றது. தவிர, தொழில் நிறுவனத்தின் பண்பாடு, உற்பத்தி, தீயணைப்பு மற்றும் போக்குவரத்து அறிவையும் கற்றுக்கொண்டேன். இதைத் தொடர்ந்து பயிற்சி ஆசிரியர் என்னைத் தொழிற்சாலைக்குக் கூட்டிச் சென்று, இயந்திரங்களின் பயன்பாடு பற்றி எனக்குக் கற்றுக்கொடுத்தார். நான் வேலை செய்வதற்கு இப்பயிற்சி நல்ல அடிப்படையை உருவாக்கியுள்ளது என்றார் அவர்.
பல்கலைக்கழகப் பட்டதாரிகள், கிராமத்திலிருந்து நகருக்குச் சென்ற விவசாயிகள் ஆகியோரைத் தவிர, வேலையிழந்து தவிப்பார்கள் மீண்டும் வேலை வாய்ப்பைப் பெறத் தூண்டச் சீன அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவை, அவர்களுக்குச் சிறிய அளவு கடன் தொகை வழங்குவது, வரியைக் குறைப்பது அல்லது விலக்குவது. இவர்களைச் சேர்த்துக்கொள்ளும் தொழில் நிறுவனங்களின் வரியைக் குறைப்பது அல்லது விலக்குவது. இன்னல் நிலைக்குள்ளாகிய மக்களுக்கு பொதுச் சேவைப் பணியை வழங்குவது என்பனவாகும்.

தொடர்புடைய வாரியம் வகுத்த குறியளவின் படி, 2006ஆம் ஆண்டில் சீனாவின் நகரங்களில் புதிய வேலை வாய்பைப் பெற்றோரின் எண்ணிக்கை 90 லட்சத்தை எட்ட வேண்டும். வேலையில்லாதோரில் 50 லட்சம் பேர் மீண்டும் வேலை வாய்ப்பைப் பெற வேண்டும். நகரங்களில் பதிவு செய்த வேலையில்லாதோரின் விகிதத்தை 4.6 விழுக்காட்டுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். கடந்த ஆண்டின் நவம்பர் திங்கள் இறுதி வரை, வேலை வாய்ப்புக்கான பல இலக்குகள் குறிப்பிட்ட காலத்துக்கு முன் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நீண்ட கால முறைமையை நிறுவச் சீன அரசு திட்டமிட்டுவருகின்றது. அதாவது, வேலைவாய்ப்புப் பணியைச் சமூகப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதுடன் ஒருங்கிணைக்கும் முறைமையை நிறுவ வேண்டும் என்று yin jian kun கூறினார்.


1 2