• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-05 16:36:30    
நடுத்தர மற்றும் சிறிய ரக வீடுகளைக் கட்டுவதை ஊக்குவிக்கும் சீன அரசு

cri

சீனப் பொருளாதார வளர்ச்சியினாலும் மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட்டுள்ளதாலும் உறைவிடம் பற்றி நகரவாசிகள் மேலும் அதிகமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஆனால் கூடுதலான மக்கள் தொகையுடைய சீனாவில் நில வளம் குறைவாக உள்ளது. வீட்டுப் பரப்பளவு வேகமாக விரிவடைந்துள்ளதால் நகரங்களில் நில வள பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அத்துடன், நடுத்தர மற்றும் குறைவான வருமானமுள்ள குடும்பங்கள் வீடு வாங்க ஆசைப்பட்டாலும் போதுமான நிதி வசதியில்லை. 2006ஆம் ஆண்டின் துவக்கத்தில், வீடமைப்பு பற்றி சீன அரசு புதிய கொள்கையை வகுத்துள்ளது. ஒரு வீட்டின் பரப்பளவு, 90 சதுர மீட்டருக்குட்பட்ட நடுத்தர மற்றும் சிறிய வீடுகளைக் கட்டுவது என்பது இனிமேல் நகரங்களில் வீடுகளின் கட்டுமானத்தில் முக்கிய கடமையாகும் என்று இப்புதிய கொள்கை வலியுறுத்துகின்றது. சீன அரசின் வழிகாட்டலில், நடுத்தர மற்றும் சிறிய ரக வீடுகளை முக்கியமாகக் கொள்ளும் சீர்திருத்தத்தை நோக்கி வீட்டுக்கட்டமைப்பு சீராக வளர்ந்துவருகின்றது.

நடுத்தர மற்றும் சிறிய ரக வீடுகள், தற்போது சீனக் கட்டட வடிவமைப்புத் துறையில் முக்கிய உள்ளடக்கமாக மாறியுள்ளன. 2006ஆம் ஆண்டு ஜுன் திங்கள் முதல் நாள் தொடங்கி, நாட்டின் பல்வேறு இடங்களில் புதிதாகக் கட்டப்படும் விற்பனைக்கான வீடுகளில் கட்டடப் பரப்பளவு 90 சதுர மீட்டருக்குட்பட்ட வீடுகளின் பரப்பளவு வகிக்கும் விகிதம், கட்டப்படும் வீடுகளின் மொத்தப் பரப்பளவில் 70 விழுக்காட்டுக்கு மேல் இருக்க வேண்டும் என்பது இதற்குக் காரணமாகும் என்று சீன அரசின் புதிய கொள்கை கூறுகின்றது.

அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் நில வளம் பற்றாக்குறையாக இருப்பதால், நபர்வாரி நிலப் பரப்பளவு, உலகின் சராசரி நிலையில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே. வேகமான நகர மயமாக்க வளர்ச்சிப் போக்கினால், மக்களுக்கு மேலும் அதிகமான வீடுகள் தேவைப்படுகின்றன. அதிக அளவிலான நிலத்தைப் பயன்படுத்தவும், ஏராளமான இரும்புருக்கு, நன்னீர் மற்றும் எரியாற்றலைச் செலவழிக்கவும் வேண்டிய பெரும் நிலப்பரப்பளவுடைய வீடுகளைக் கட்டுவதென்ற நுகர்வு முறை, தொடர வல்ல வளர்ச்சிக் கோட்பாட்டுக்குப் புறம்பானது. இது பற்றி சீனாவின் வீடு மற்றும் நில

1 2