உடைமைத் தொழில் சங்கத்தின் துணைத் தலைவர் சூ சொங்யி பேசுகையில், நடுத்தர மற்றும் சிறிய ரக வீடுகளைக் கட்டுவதென்ற நுகர்வு முறை, சீனாவின் மக்கள் தொகை, வளம் மற்றும் இக்கால கட்டச் சமூகப் பொருளாதார வளர்ச்சியின் எதார்த்த நிலைமைக்கு ஏற்றது என்றும் சாதாரண மக்களின் உறைவிடப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் நகர மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கும் துணை புரியும் என்றும் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறியதாவது,
நடுத்தர மற்றும் சிறிய ரக வீடுகளை முக்கியமாகக் கொள்ளும் நுகர்வு முறையை நிறுவதைச் சீன அரசு ஊக்குவிப்பதற்கு 2 காரணங்கள் உள்ளன. ஒன்று, தற்போது இத்தகைய வீடுகள் பற்றாக்குறையாக உள்ளன. இரண்டு, சீனாவில் நில வளம் குறைவு. தவிர, நபர்வாரி மூலவளம் குறைவாக இருக்கும் ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் வழிமுறையைப் பயன்படுத்தியுள்ளோம். இந்த நாடுகளில் வீட்டுப் பரப்பளவு பற்றி சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றார் அவர்.
நீண்ட காலமாக, வீட்டு விநியோக முறைமையின் கட்டுப்பாட்டினால், சீன மக்களின் வீடு சிறியதாக இருந்துவந்தது. 1978ஆம் ஆண்டில் சீனாவின் நகரங்களில் நபர்வாரி கட்டட பரப்பளவு 7.2 சதுர மீட்டராக மட்டும் இருந்தது. கடந்த நூற்றாண்டின் இறுதியில் சீனாவில் புதிய வீட்டு முறைமை வெளியிடப்பட்டது. நகரவாசிகளின் வீடுகள் அரசால் வழங்கப்பட்டதற்குப் பதிலாக சந்தை மூலம் வீட்டு வளம் பங்கீடு செய்யப்படத் துவங்கியது. விற்பனைக்கான வீடு, சிக்கன ரக வீடு, விலை மலிவான வாடகை வீடு ஆகியவற்றைக் கொண்ட வீட்டு முறைமை நிறுவப்பட்டுள்ளது. இதன் விளைவாக வீட்டுச் சந்தை விறுவிறுப்பாக இருப்பதோடு, வீட்டுக் கட்டுமானப் பணியும் வேகமாக வளர்ந்துவருகின்றது. 2005ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் நபர்வாரி வீட்டுப் பரப்பளவு 26 சதுர மீட்டரைத் தாண்டியுள்ளது. 1 2
|