தவளைகளை பற்றி ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன். சாதரண தண்ணீரில் ஒரு தவளையை விட்டால் அது உடனே எகிறி குதித்து ஓடாது. அதே தவளையை கொதிக்கும் நீரில் எடுத்து போடுங்கள், அது சட்டென எகிறிக்குதித்து தன்னை காப்பாற்றிகொள்ளும். ஆக சூடான் நீரில் இருந்தால் உடல் வெந்துபோகும், மரணம் நிச்சயம் என்பது அதன் அறிவுக்கு எட்டுகிறதோ இல்லையோ, கொதிக்கும் நீரின் வெப்பம் தாங்காமல் அது எகிறி குதிக்கிறது என்பது உண்மை. ஆனால் சாதரண நீரில் தவளையை விட்டு, நீரை கொஞ்சம் கொஞ்சமாக வெப்பமேற்றினால் தவளைக்கு சூடு அதிகரிப்பது உணர்வதற்குள் அதற்கு மரண ஓலை வாசிக்கப்பட்டிருக்கும். இந்த தவளைக் கதையை பல ஆண்டுகளாக மக்கள் சொல்லக் கேள்வி. இதே நிலைதான் நம் மனிதகுலத்துக்குமா என்கின்றனர் அறிவியலர்கள். தவளைக்கும் மனிதர்களுக்கும் எப்படி இங்கே தொடர்பு வந்தது?

கவனமாகக் கேளுங்கள். திடீரென உலகத்தின் அழிவு பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியானால் மனிதகுலம், குறிப்பாக அரசாங்கங்கள் கொதிநீரில் போட்ட தவளையாக வெளியே எகிறிக்குதித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா அல்லது மெல்ல மெல்ல சூடேற்றப்படும் நீரில் சுகமாக நீந்தி மடியும் தவளைபோல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போகுமா? இக்கேள்விக்கு விடை தெரியவேண்டுமா இன்னும் சில நாட்கள் நாம் பொறுத்திருப்போம்.
1 2 3
|