• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-07 09:49:15    
விவாக ரத்து 4

cri

"படிச்சு பெரிய மனுசங்க எப்பவும் நியாயந்தான் பேசுவாங்க. பதினஞ்சு வயசுல கல்யாணம் ஆன நாளில இருந்து நடந்த கதை எல்லாத்தையும் நான் சொல்லணும்..."

சூப் குடித்து முடித்த போது, நேரம் சரியாக இருந்தது. உடனே விவசாயக் கூலி ஆள் ஒருவன், அவளையும், அப்பாவையும் பெரிய கூடத்தைக் கடந்து, மூலையில் இருந்த வரவேற்பு அறைக்கு அழைத்துச் சென்றான்.

அந்த அறை நிறைய சாமான்களாகக் கிடந்ததன. சிவப்பு, ஊதா நிறங்களில் பட்டுச் சட்டை அணிந்த பெரிய மனிதர்கள் பலர் அவளைச் சுற்றிலும் மினுக்கிக் கொண்டு இருந்தனர். அவர்களுக்கு நடுவிலே ஏழாவது முதாளி. வட்ட முகம், வட்டத் தலை—அங்கே இருந்த வெய் போன்ற மனிதர்களை விட எவ்வளவோ பெரியவராகத் தெரிந்தார். அவருடைய வட்டமான பெரிய முகத்தில் ஈர்க் குச்சி போல இடுங்கிய கண்கள். குளவி ஒட்டிக் கொண்டது போல மீசை. வழுக்கைத் தலைதான். ஆனாலும் தலையும் முகமும் பளபளத்தன. அய் குவுக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. அப்புறம் நினைத்துக் கொண்டாள்—பன்றிக்கொழுப்பு தேய்த்திருப்பாரோ!

"இது குத அடைப்பு—நம்ம முன்னோர்கள் பிணத்தைப் புதைக்கிற போது, இது பிணத்தோட குதத்துல திணிச்சாங்க."

ஏழாவது முதலாளி எதையோ கையில் தூக்கிக் கட்டினார். அதைக் கொண்டு தனது மூக்கில் இரண்டு தடவை தேய்த்துக் கொண்டார். தேய்ந்து போன ஒரு கல்லைப் போல் இருந்தது.

1 2