சீன வானொலி பிரதிநிதி குழுவின் தெற்காசிய பணிப் பயணத்தில் கவனம் செலுத்திய இந்திய செய்தி ஊடகங்கள் என்னும் செய்தியறிக்கையை வழங்குகின்றோம். எழுதியவர் தி.கலையரசி.
வணக்கம் நேயர்களே. சீன வானொலி நிலையம் இலங்கை இந்தியா நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அனுப்பிய பிரதிநிதிக் குழு, கடந்த நவம்பர் திங்கள் 23ம் நாளிரவு தமிழகத்தின் தலைநகர் சென்னை சென்றடைந்தது. 24ம் நாள் காலை தென்னிந்தியாவில் 8 லட்சம் பிரதிகளை வெளியிடும் பெரிய செய்தியேடான தினமணி நாளேட்டின் செய்தியாளர்கள், பிரதிநிதிக் குழு தங்கியிருந்த மார்ஸ் ஹோட்டலுக்கு வந்து குழுத் தலைவர் சுன் சியென் ஹு குழுவுறுப்பினர் தி. கலையரசி ஆகியோரை பேட்டி கண்டனர்.
பேட்டியளிக்கையில் சீன வானொலி நிலையத்தின் வெளிநாட்டு ஒலிபரப்புக் கட்டமைப்பு, நாளுக்கு எத்தனை மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவது, நிகழ்ச்சிகளின் அம்சங்கள், இணைய தளத்தின் வளர்ச்சி, எத்தனை நேயர்கள் சீன வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகளை கேட்கின்றனர் போன்ற தகவல்கள் பற்றி குழுத் தலைவர் சுன் சியென் ஹு செய்தியாளர் பழனியப்பனிடம் விபரமாக கூறினார். குழுவுறுப்பினர் தி. கலையரசி அவரது மொழிபெயர்பாளராக நன்றாக வேலை செய்ததோடு தமகு தமிழகத்தின் தம் கல்வி அனுபவம், தமிழில் சேவை புரிவது, தமிழ் மக்களின் ஆர்வம் ஆகியவை பற்றிய வினாக்களுக்கு விடையளித்தார். இந்த பேட்டி தினமணி நாளேட்டில் வெளியிடப்பட்டதும் தமிழகத்தில் மாபெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது.
24ம் நாள் சென்னையிலிருந்து ஈரோடுக்கு செல்லும் வழியில் பிற்பகல் 5 மணி நேரம் கார் பயணம் செய்த பின் விழுப்புரம் மாவட்ட நேயர்களை சந்திக்கும் வாய்ப்பு பிரதிநிதிக் குழுவுக்கு கிடைத்தது. பிரதிநிதிக் குழுவுக்காக கிட்டத்தட்ட 100 நேயர்களின் பிரதிநிதிகள் காலை முதல் பிற்பகல் வரை காத்திருந்து கடைசியில் பிரதிநிதிக் குழுவுறுப்பினர்களை முகமலர்ச்சியுடன் வரவேற்றனர். அப்போது உள்ளூர் தொலைகாட்சி செய்தியாளர்கள், தினமலர், தினமணி, தினத்தந்தி, தினகரன் போன்ற நாளேடுகளின் செய்தியாளர்கள் ஆகியோர் நேயர்களுடன் சேர்ந்து குழுவுறுப்பினர்களை வரவேற்று சந்தினர். இதற்கிடையில் உற்றார் உறவினர்களை வரவேற்பது போல் பிரதிநிதிக் குழுவுறுப்பினர்களை நேயர்கள் உபசரித்தனர். விழுப்புரம் மாவட்ட நேயர் மன்றத் தலைவர் எஸ் பாண்டியராஜன் மன்ற உறுப்பினர்களின் சார்பில் வெண்கல நடராஜர் சிலை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். சிலையுடன் எடுக்கப்பட்ட நிழற்படம் 25ம் நாள் வெளியிடப்பட்ட பல நாளேடுகளில் பிரசுரிக்கப் பட்டது. அதனுடன் செய்தியாளர்களுக்கு பிரதிநிதிக்குழு அளித்த பேட்டியும் வெளியிடப்பட்டது. பிரதிநிதிக் குழுவுறுப்பினர்களும் நேயர்களும் சிரித்த முகத்துடன் நிழற்படத்தில் காணப்படுகின்றனர்.
25ம் நாள் நள்ளிரவு 3 மணிக்கு பிரதிநிதிக் குழு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியின் விருந்தினர் மாளிகையைச் சென்றடைந்தனர். காலை எட்டு மணிக்கு எழுந்து சமூக நலத் துறையின் நட்பு மரம் நடும் நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர். இந்திய சீன நட்பை அறிவிக்கும் வகையில் 30க்கும் அதிகமான குட்டி மரங்கள் இரண்டு 3 ஆண்டுகளுக்கு பின் சுறுசுறுப்பாக வளர்ந்து கொண்டேயிருக்கும். அப்போது மீண்டும் பெருந்துறைக்கு வந்து அவற்றை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமல்லவா?. முற்பகல் கொங்கு பொறியியல் கல்லூரியை பார்வையிட்டு அங்குள்ள பண்பலை வானொலியின் ஒலிபரப்பு அறையில் விருந்தினர்களாக உபசரிக்கப்பட்டு கல்லூரி மாணவர்களுடன் பிரதிநிதிக் குழுவுறுப்பினர்கள் உரையாடி நிகழ்ச்சியை உருவாக்கினார்கள். மாணவர்கள் அக்கறை செலுத்தும் பிரச்சினைகளுக்கு விபரமாக பதிலளிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக சீனா இந்தியா ஆகிய இரு நாடுகளின் உயர் நிலை தலைவர்களின் பரிமாற்ற பயணம், இரு நாடுகளுக்கிடையிலான பண்பாட்டு பரிமாற்ற வரலாறு, இரு நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சி முதலிய அம்சங்கள் பற்றி குழுத் தலைவர் சுன் சியென் ஹு பதிலளிக்க அவற்றை தி கலையரசி தமிழில் மொழி பெயர்த்தார். தவிரவும், விருந்தினர் என்ற முறையில் குழுவுறுப்பினர் தி கலையரசி 25ம் நாளிரவு ஈரோடு கிங் உள்ளூர் தொலைக் காட்சி நிலையத்தில் நேருக்கு நேர் என்ற முறையில் ஒரு மணி நேரம் பார்வையாளர்களுடன் உரையாடினார். தொலைபேசி வாயிலாக, பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் விரிவான முறையில் பதிலளித்தார்.
1 2
|