• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-08 10:05:29    
சீன வானொலி பிரதிநிதி குழுவின் தெற்காசிய பணிப் பயணத்தில் கவனம் செலுத்திய இந்திய செய்தி ஊடகங்கள்

cri
தமிழகத்தில் வந்து 2 நாட்களுக்குள் பல செய்தியேடுகள், தொலைக் காட்சி நிலையம், பண்பலை வானொலி நிலையம் ஆகியவற்றின் மூலம் பிரதிநிதிக் குழுவின் தமிழக வருகை பிரச்சாரம் செய்யப்பட்டது. இது தமிழகத்தில் மாபெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. பல நேயர்கள் தொலை தூரப் பயணத்தை பொறுட்படுத்தாமல் அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கில் கலந்து கொண்டனர். பலர் வேலை அல்லது சொந்த வேலை காரணமாக கருத்தரங்கில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அவர்கள் தொலை பேசி மூலம் அடுத்தடுத்து செய்தியேடுகளிலும் பண்பலை வானொலி மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சியிலும் கேட்ட கண்ட உணர்வை தெரிவித்து பிரதிநிதிக் குழுவிடம் மகிழ்ச்சி தெரிவித்தனர். அத்துடன் அடுத்த கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மன உறுதியை தெரிவித்தனர். தொடர்ந்து தமிழ் நிகழ்ச்சிகளை கேட்டு மேலும் கூடுதலான நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களை எழுதும் விருப்பத்தினை அவர்கள் தெரிவித்தனர். சீன வானொலி நிலையம் நடத்தும் பொது அறிவு போட்டியில் பங்கெடுப்பது தொடர்பான அவர்களின் ஆர்வமும் தெரிவிக்கப்பட்டது.

நீங்கள் கேட்டு கொண்டிருப்பது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி. சீன வானொலி பிரதிநிதி குழுவின் தெற்காசிய பணிப் பயணத்தில் கவனம் செலுத்திய இந்தியச் செய்தி ஊடகங்கள் பற்றிய செய்தியறிக்கையை தொடர்ந்து கேளுங்கள்.

26ம் நாள் அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது. பெருந்துறை சட்ட மன்ற உறுப்பினர் சி பொன்னு துரை, ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் குப்பு சாமி, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கௌரவத் தலைமைச் செயலர் தாமஸ் ப. ஜான், மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் முதலிய முக்கிய அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் கருத்தரங்கில் விருந்தினராக கலந்து கொண்டனர். 500க்கும் அதிகமான நேயர்கள் சில நூறு கிலோமீட்டர் தொலைவிலிருந்து 8, 9 மணி நேரம் பேருந்து பயணம் செய்து கருத்தரங்கில் கலந்துகொண்டனர். குறிப்பாக வானொலியில் மூன்று முறை வந்து உதவி செய்த நிபுணர் ந. கடிக்காச்சலமும் கருத்தரங்கில் கலந்து கொண்டார். இங்கே அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். கருத்தரங்கின் விபரம் இரவு பெருந்துறை நகரின் உள்ளூர் தொலைக் காட்சி நிலையத்தின் மூலம் ஒளிபரப்பச்சது. 27ம் நாள் காலை உள்ளூர் நாளேடுகளில் பெருமளவில் கருத்தரங்கு நடைபெற்றது பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டன.

குறுகிய 4 நாள் இந்திய பயணத்தில் இந்தியச் செய்தி ஊடகங்கள் மிகவும் கவனம் செலுத்தின. தினமணி, தின மலர், தினகரன், தினத்தந்தி, மாலைமலர், தமிழ்முரசு போன்ற நாளேடுகளின் செய்தியாளர்கள் சீன வானொலி நிலையத்தின் பிரதிநிதிக் குழுவுறுப்பினர்கள் நேயர்களை சந்திக்கும் செய்திகளை வெளியிட்டனர். அவர்கள் எழுதிய செய்திகள் நாளேடுகளிலும் இதழ்களிலும் வெளியிடப்பட்டன. செய்தி அறிவிப்பு மூலம் சீன வானொலி நிலையத்தின் மதிப்பு தமிழகத்தில் பெரிதும் உயர்ந்துள்ளது.

குறிப்பாக கவனிக்க வேண்டியது அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு நடைபெற்ற நாளில் பல வட்டாரங்களில் உள்ள தமிழ் நேயர் மன்றங்கள் நிறுவப்பட்டன. சேலம் மாவட்ட தமிழ் நேயர் மன்றத்தின் உருவாக்கமும் கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கை முயற்சி ஆகியவற்றின் மூலம் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு இந்தியாவில் மென்மேலும் பரவலாவது திண்ணம்.

நேயர்கள் இதுவரை சீன வானொலி பிரதிநிதி குழுவின் தெற்காசிய பணிப் பயணத்தில் கவனம் செலுத்திய இந்தியச் செய்தி ஊடகங்கள் என்னும் செய்தியறிக்கையை கேட்டீர்கள்.


1 2